Gen Z முதல் 90ஸ் கிட்ஸ் வரை… ஜெயராம் – சிம்ரன் படத்தின் கதை இதுதான்!

ஜெயராம் மற்றும் சிம்ரன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் சென்னையில் கோலாகலமாக தொடங்கியுள்ளது. படக்குழுவினர் மற்றும் திரையுலகைச் சேர்ந்த பல முக்கிய பிரபலங்கள் கலந்துகொண்டு புதிய படைப்புக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

‘தேஜாவு’, ‘வித்தைக்காரன்’ உள்ளிட்ட திரைப்படங்களை தயாரித்த White Carpet Films சார்பில் K. விஜய் பாண்டி மற்றும் Redacted Studios சார்பில் Shanjan G. ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர். The Show People சார்பில் நடிகர் ஆர்யா இப்படத்தை வழங்குகிறார்.

‘ராட்சசி’, ‘கழுவேத்தி மூர்க்கன்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய SY கௌதம்ராஜ், இப்படத்தை எழுதி இயக்குகிறார்.

குடும்ப உறவுகள், காதல் மற்றும் நகைச்சுவையை மையமாகக் கொண்ட ஃபேமிலி ரோம்-காம் என்டர்டெய்னராக இப்படம் உருவாகிறது. குறிப்பாக Gen Z, 2K தலைமுறை மற்றும் 90-களில் வளர்ந்த தலைமுறை என வெவ்வேறு தலைமுறைகளைச் சேர்ந்தவர்களின் வாழ்க்கை முறை, எண்ணங்கள், எதிர்பார்ப்புகள் மற்றும் உறவுகளில் ஏற்படும் மாற்றங்களை மையமாக வைத்து கதை அமைக்கப்பட்டுள்ளது.

தலைமுறைகளுக்கு இடையிலான புரிதல், கருத்து வேறுபாடு மற்றும் உறவுகளில் உருவாகும் சுவாரஸ்யமான சம்பவங்களை நகைச்சுவையுடன் பதிவு செய்யும் வகையில் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. குடும்பத்துடன் இணைந்து ரசிக்கக்கூடிய முழுமையான பொழுதுபோக்கு படமாக இப்படத்தை உருவாக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

இப்படத்தில் ஜெயராம் மற்றும் சிம்ரன் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ‘வாழை’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக கவனம் பெற்ற பொன்வேல், முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

மேலும் தேவிகா சதீஷ், பகவதி பெருமாள் (பக்ஸ்) உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்துள்ளனர்.

படத்தின் ஒளிப்பதிவை தீபக் மேற்கொள்கிறார். அச்சு ராஜாமணி இசையமைக்கிறார். படத்தொகுப்பை அருள் E. சித்தார்த் கவனிக்கிறார். மகேந்திரன் கலை இயக்குநராக பணியாற்றுகிறார். பாடல்களுக்கு கார்த்திக் நேதா வரிகள் எழுதுகிறார். அனுஷா விஸ்வநாதன் நடன இயக்குநராக பணியாற்றுகிறார்.

ஆடை வடிவமைப்பை M. முகமது சுபியர் கவனிக்க, ஒப்பனைப் பணிகளை ஷயத் மாலிக் S மேற்கொள்கிறார். SN அஸ்ரஃப் தயாரிப்பு கட்டுப்பாட்டாளராகவும், D. உதயகுமார் தயாரிப்பு நிர்வாகியாகவும் பணியாற்றுகின்றனர்.

சரவணகுமார் கிரியேட்டிவ் தயாரிப்பாளராகவும், சாய்ராம் எக்ஸிகியூட்டிவ் தயாரிப்பாளராகவும், விஜய் வெங்கடராமன் தயாரிப்பு ஒருங்கிணைப்பாளராகவும் பொறுப்பேற்றுள்ளனர்.

விளம்பர வடிவமைப்பை கன்னதாசன் DKD மேற்கொள்கிறார். ஜெய்குமார் வைரவன் ஸ்டில்ஸ் பணிகளை கவனிக்கிறார். மக்கள் தொடர்புப் பணிகளை சதீஷ் (AIM) மேற்கொள்கிறார். ராஜ். கதிர்ஹாசன் இணை இயக்குநராக பணியாற்றுகிறார்.

படத்தின் பூஜை விழாவில் தயாரிப்பாளர் Fivestar கதிரேசன், Drumsticks Productions தயாரிப்பாளர் விவேக், Shanthi Talkies தயாரிப்பாளர் அருண் விஷ்வா, இயக்குநர் H. வினோத், நடிகர் நட்டி, Stone Bench தயாரிப்பாளர் கார்த்திகேயன் உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர்.

வித்தியாசமான தலைமுறைகளின் உறவுகளை மையமாகக் கொண்ட கதை, ஜெயராம் – சிம்ரன் கூட்டணி மற்றும் நகைச்சுவை கலந்த குடும்பப் பின்னணி ஆகியவை இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை தொடக்கத்திலேயே அதிகரித்துள்ளன.

பூஜையுடன் பணிகள் தொடங்கியுள்ள இப்படம் தொடர்பான தலைப்பு, ஃபர்ஸ்ட் லுக் மற்றும் இதர முக்கிய அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.