“துரோகம் பழகு” படத்தின் இரண்டாவது பார்வையை வெளியிட்ட புதுச்சேரி முதலமைச்சர்!

மகிழ் புரொடக்ஷன்ஸ் சார்பில் C. பியூலா மகிழ் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘துரோகம் பழகு’. சமூக அக்கறையுடன் உருவாகியுள்ள இப்படத்தின் இரண்டாவது பார்வையை புதுச்சேரி முதலமைச்சர் N. ரங்கசாமி வெளியிட்டு, படக்குழுவினருக்கு தனது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார்.

சமூக நலன் சார்ந்த கருத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ள தக்க்ஷன் விஜய்யின் முயற்சியையும் முதலமைச்சர் பாராட்டியுள்ளார். மேலும், திரைப்படத்தின் ரஃப் கட் காட்சிகளை பார்வையிட்ட அவர், படக்குழுவினரின் பணியை வெகுவாக பாராட்டியதுடன், படத்தை உருவாக்குவதில் ஈடுபட்ட அனைவரின் உழைப்புக்கும் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

‘துரோகம் பழகு’ திரைப்படத்தில் தக்க்ஷன் விஜய் கதாநாயகனாக நடிக்கிறார். அவருடன் லொள்ளு சபா ஜீவா, ஜி. எம். குமார், ஜானகி அம்மா, வனிதா விஜயகுமார், அப்புக்குட்டி, அமுதவாணன், திவாகர், கஞ்சா கருப்பு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

பாலா மற்றும் ராஜா இணைந்து இப்படத்திற்கு இசையமைத்துள்ளனர். திரைப்படத்திற்காக கவிஞர் வைரமுத்து எழுதியுள்ள பாடலை வைக்கம் விஜயலட்சுமி பாடியுள்ளார். இப்படத்தை சீயோன் ராஜா எழுதி இயக்கியுள்ளார்.

சமூக கருத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘துரோகம் பழகு’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா விரைவில் நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து, படம் திரையரங்குகளில் வெளியாகும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.