டிரெய்லர் வரவேற்புக்குப் பின் யு சான்றிதழ் பெற்றது “அங்கீகாரம்”

ஸ்வஸ்திக் விஷன்ஸ் தயாரிப்பில், இயக்குநர் தென்பாதியான் இயக்கத்தில், அறிமுக நடிகர் கே.ஜெ.ஆர் கதாநாயகனாக நடித்துள்ள “அங்கீகாரம்” திரைப்படம், சென்சார் குழுவின் பார்வைக்குப் பிறகு யு (U) சான்றிதழ் பெற்றுள்ளது. இதன்மூலம் அனைத்து தரப்பு ரசிகர்களும் குடும்பத்துடன் கண்டு ரசிக்கும் படமாக “அங்கீகாரம்” உருவாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே வெளியாகியுள்ள படத்தின் டிரெய்லர் மற்றும் முதல் சிங்கிள் பாடலான “சட்ட சட்ட சட்ட சான்றோரே” ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையில், கவிஞர் கார்த்திக் நேத்தா எழுதியுள்ள இந்த பாடலை பாடகி வைக்கம் விஜயலட்சுமி பாடியுள்ளார். சட்டம், நீதி மற்றும் சமூகக் கேள்விகளை மையமாகக் கொண்ட பாடலின் வரிகள் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளன.

பல உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள “அங்கீகாரம்”, தடகள வீரர்கள் சந்திக்கும் சவால்கள் மற்றும் அங்கீகாரத்திற்கான அவர்களின் போராட்டத்தை பேசும் படமாக உருவாகியுள்ளது. மறுக்கப்பட்ட தனது உரிமைக்காக நீதிமன்றத்தின் கதவைத் தட்டும் ஒரு தடகள வீரரின் வாழ்க்கைப் பயணமே இப்படத்தின் மையக் கதையாகும்.

இயக்குநர் பா. இரஞ்சித் அவ

ர்களின் உதவி இயக்குநராக பணியாற்றிய தென்பாதியான், இந்த படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். சமூக அக்கறையுடன் எழுதப்பட்ட வசனங்கள் ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாகி வருகின்றன.

படத்தில் கே.ஜெ.ஆர், விஜி வெங்கடேஷ், அஜித் கோஷி, சிந்தூரி விஸ்வநாத், ரங்கராஜ் பாண்டே, மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ஏ. விஸ்வநாத் ஒளிப்பதிவு செய்துள்ளார். பீட்டர் ஹெயின் சண்டைக் காட்சிகளை வடிவமைத்துள்ள நிலையில், தினேஷ்குமார் படத்தொகுப்பை கவனித்துள்ளார். ராமு தங்கராஜ் கலை இயக்கம், சம்பத் ஆழ்வார் ஒலி வடிவமைப்பு மற்றும் ஷெரீப் நடன அமைப்பு ஆகியவை படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளன.

டிரெய்லர், வசனங்கள் மற்றும் முதல் பாடலின் வரவேற்பால் ஏற்கனவே கவனம் ஈர்த்துள்ள “அங்கீகாரம்”, வரும் ஜூன் 26 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. சமூக அக்கறையுடனும் உணர்வுபூர்வமான கதையுடனும் உருவாகியுள்ள இப்படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.