60% படப்பிடிப்பு நிறைவு! விக்கல்ஸ் விக்ரமின் “லைட் வெயிட் பேபி” அப்டேட்

‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நடிகரும், ஸ்டாண்ட்-அப் காமெடியனுமான விக்கல்ஸ் விக்ரம் கதையின் நாயகனாக அறிமுகமாகும் ‘லைட் வெயிட் பேபி’ திரைப்படத்தின் 60 சதவீத படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

இயக்குநர் கே.சி. குரு இயக்கத்தில் உருவாகி வரும் இந்த திரைப்படத்தில் விக்கல்ஸ் விக்ரமுடன் நடிகை ஆர்த்தி கிருஷ்ணா கதாநாயகியாக நடித்து வருகிறார். ரொமான்டிக் காமெடி என்டர்டெய்னராக தயாராகி வரும் இப்படம், இளைஞர்களை கவரும் வகையில் உருவாக்கப்பட்டு வருகிறது.

பிரமோத் கோடியன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு சரவணன் சுப்பிரமணியம் இசையமைக்கிறார். ஹரிஷ் கோமே படத்தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார். ஹிதா ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படத்தை தயாரிப்பாளர்கள் சாகர் சந்தேஷ் இணைந்து தயாரித்து வருகின்றனர்.

ஏற்கனவே வெளியிடப்பட்ட படத்தின் டைட்டில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்த நிலையில், தற்போது 30 நாட்கள் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் பெங்களூருவில் நடைபெற்ற இரண்டு கட்ட படப்பிடிப்புகளும் முடிவடைந்துள்ள நிலையில், மொத்த படப்பிடிப்பில் 60 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன.

இதனையொட்டி வெளியிடப்பட்டுள்ள பிரத்யேக புகைப்படமும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

ஸ்டாண்ட்-அப் காமெடியனாக ரசிகர்களிடையே பிரபலமான விக்கல்ஸ் விக்ரம் மற்றும் பிட்னஸ் மாடலான ஆர்த்தி கிருஷ்ணா ஆகியோரின் புதிய கூட்டணி ரசிகர்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. இருவரின் வித்தியாசமான திரை இணைப்பு படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

‘லைட் வெயிட் பேபி’ திரைப்படம் தொடர்பான அடுத்தடுத்த அப்டேட்கள் விரைவில் வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.