வித்தியாசமான கதைக்களத்தில் “ஜுமாக்கா” படக்குழுவை பாராட்டிய விஜய் ஆண்டனி!

ஜே.பி. சினிமாஸ் நிறுவனத்தின் சார்பில் ஜெயக்குமார் மற்றும் ப்ரீத்தி தயாரிக்கும் புதிய காமெடி-ஃபேன்டஸி திரைப்படமான ‘ஜுமாக்கா’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.

பழமையான ஒரு கேமராவை மையமாகக் கொண்டு வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகும் இந்த திரைப்படம், முழுவதும் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்ட அரங்குகளில் படமாக்கப்பட்டுள்ளது. சிரிப்புக்கும், கற்பனைக்கும் முக்கியத்துவம் அளிக்கும் இப்படத்தில் முனீஸ்காந்த், பாலாஜி சக்திவேல், ரெடின் கிங்ஸ்லி, விவேக் பிரசன்னா, கல்கி ராஜா, ஜென்சன் திவாகர், தயாரிப்பாளர் ஜெயக்குமார், வினோத் முன்னா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

படத்திற்கு ‘ஜுமாக்கா’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ள நிலையில், அதன் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதேநேரத்தில், படத்தின் சில முக்கிய காட்சிகளை முன்கூட்டியே பார்த்த விஜய் ஆண்டனி, இயக்குநர் அசோக் ராம் மற்றும் தயாரிப்பாளர் ஜெயக்குமார் ஆகியோரின் முயற்சியையும், படத்தின் வித்தியாசமான உருவாக்கத்தையும் மனதார பாராட்டியதாக படக்குழு தெரிவித்துள்ளது.