தொழில்துறையில் சிறந்து விளங்கும் முன்னணி நிறுவனங்கள், வளர்ந்து வரும் தொழில்முனைவோர் மற்றும் பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களை கௌரவிக்கும் வகையில் ‘நியூஸ் 7 தமிழ்’ தொலைக்காட்சி ஏற்பாடு செய்திருந்த ‘Business Excellence Awards 2026’ விருது வழங்கும் விழா, சென்னை ஹயாத் நட்சத்திர ஹோட்டலில் சிறப்பாக நடைபெற்றது.
இந்த விழாவில், தொழில் துறையில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கிய முன்னணி தொழிலதிபர்கள், புதிய முயற்சிகளால் கவனம் பெற்ற தொழில்முனைவோர் மற்றும் பல்வேறு துறைகளில் வெற்றி கண்ட ஆளுமைகள் கௌரவிக்கப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டன.
விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர், மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத், தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் ஜி.கே.எம். தமிழ்குமரன் மற்றும் வேலம்மாள் குழுமத்தின் எம்.வி.எம். வேல்மோகன் ஆகியோர் விருதுகளை வழங்கி விருதுபெற்றவர்களை வாழ்த்தினர்.
மேலும், பிரபல திரைப்பட தயாரிப்பாளர் கண்ணன் ரவி, ஆச்சி மசாலா நிறுவனத்தின் ஐசக் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களும் இந்த விழாவில் விருதுகளைப் பெற்றனர்.
விருதுகளை வழங்கியபின் தொழிலதிபர்களை திரு.GKM தமிழ்குமரன் வாழ்த்தி பேசினார். இது போன்ற விருதுகள் உற்சாகம் அளிக்கும். வாழ்வில் உயர உத்வேகத்தை கொடுக்கும். தொடர்ச்சியாக இந்த விழா நடக்க வேண்டும், விருதுகளை பெற்றவர்களுக்கு வாழ்த்துகள் என்றார்.





