மலையாள சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களின் படங்களுடன், இளம் படைப்பாளிகளின் புதுமையான கதைக்களங்களும் தொடர்ந்து வெற்றியைப் பெற்று வருகின்றன. அந்த வரிசையில், புதிய சிந்தனை மற்றும் வித்தியாசமான கதை சொல்லும் முறையுடன் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஆலி’. தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய இரு மொழிகளில் தயாராகியுள்ள இந்த படம், ஆகஸ்ட் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
தமிழ்நாடு – கேரள எல்லைப்பகுதியை பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த திரைப்படம், ஒரு இளம் பெண்ணின் வாழ்க்கைப் பயணத்தை மையமாகக் கொண்டது. காதல், குடும்ப உறவுகள், மதம், கலாச்சாரம் மற்றும் வாழ்க்கையில் நிகழும் எதிர்பாராத மாற்றங்கள் ஆகியவற்றை உணர்வுபூர்வமாக சொல்லும் இந்தக் கதையின் உச்சக்கட்டமாக, மதம் மற்றும் ஜாதி எல்லைகளைத் தாண்டிய திருமணம் இடம்பெறுகிறது.
இந்த திரைப்படத்தில் பிரஜின், டாக்டர் கிருஷ்ணா பிரியதர்ஷன், கைலாஷ், கிருஷ்ண பிரசாத், லதா தாஸ், டாக்டர் ரஜித் குமார், சௌரவ் ஷ்யாம், ஆத்யா பிரசாத் (சுருதி), மன்ஹர் பிரியதர்ஷன், ஜோபி, மன்சாட் லீலா, சுரேஷ் திருவல்லா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
திரைப்படத்தை டாக்டர் கிருஷ்ணா பிரியதர்ஷன் எழுதி இயக்கியுள்ளார். இயக்குநராக மட்டுமல்லாமல், படத்தின் பாடல் வரிகளையும் அவரே எழுதியுள்ளார். மன்ஹர் சினிமாஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது.
ரினாஸ் நாசர் ஒளிப்பதிவை கவனித்துள்ள நிலையில், அபு ஜியாத் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார். இசையை ராமவர்மா தம்புரான், சுரேஷ், ரத்தீஷ் ராய், ஆர்.ஆர். பிரதர்ஸ் மற்றும் ஷ்ரத்தா பார்வதி ஆகியோர் இணைந்து அமைத்துள்ளனர்.
மேலும், ஹுசைன், சம்பத், அரவிந்த் வேணுகோபால், ரித்து கிருஷ்ணா, சரிதா ராஜீவ் ஆகியோர் பாடல்களைப் பாடியுள்ளனர். அரபி மற்றும் இந்தி பாடல்களுக்கு ரத்தீஷ் ராய் இசையமைத்துள்ளார்.
ஒலியமைப்பை என். ஷாபு செருவல்லூர், டி.ஐ. பணிகளை சஜய் சி.ஆர்., நடன அமைப்பை அதுல் ராதாகிருஷ்ணன் மற்றும் சுனிதா நோயல் ஹாய், கலை இயக்கத்தை அகிலேஷ் மற்றும் ஷிஜு அபாஸ்கர், தயாரிப்புக் கட்டுப்பாட்டை ஸ்ரீதர் மேற்கொண்டுள்ளனர்.
காதல், மனிதநேயம் மற்றும் சமூக உறவுகளை வித்தியாசமான கோணத்தில் பதிவு செய்யும் ‘ஆலி’ திரைப்படம், தமிழ் மற்றும் மலையாள ரசிகர்களை ஒருசேர கவரும் படைப்பாக உருவாகியுள்ளது. இந்த திரைப்படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.





