மார்வெல் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வரும் பிரம்மாண்ட திரைப்படமான ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ படத்தின் புதிய ஸ்பெஷல் புரோமோ வெளியாகி இணையத்தில் பெரும் கவனம் பெற்றுள்ளது. இந்தியாவில் இப்படம் ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் டிசம்பர் 18, 2026 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
டி23: தி அல்டிமேட் டிஸ்னி ஃபேன் ஈவண்ட் நிகழ்வில் இப்படத்தின் சிறப்பு புரோமோவை மார்வெல் ஸ்டுடியோஸ் வெளியிட்டது. மார்வெல் ஸ்டுடியோஸ் தலைவர் கெவின் ஃபீஜ், நடிகர்கள் ராபர்ட் டவுனி ஜூனியர், கிறிஸ் எவன்ஸ் மற்றும் ஹேலி அட்வெல் ஆகியோர் இணைந்து இந்த புரோமோவை அறிமுகப்படுத்தினர்.
இந்த புதிய காட்சிகளில் ராபர்ட் டவுனி ஜூனியர் ஏற்று நடிக்கும் விக்டர் வான் டூம் / டாக்டர் டூம் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் MCU-வின் அடுத்த மிகப்பெரிய வில்லனாக டாக்டர் டூம் உருவெடுப்பது குறித்த எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.
வனேசா கிர்பி நடிக்கும் சூ ஸ்டார்ம் கதாபாத்திரமும் புரோமோவில் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் டாக்டர் டூம் மற்றும் தோர் இடையேயான மோதலுக்கான முன்னோட்டமும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அந்தோனி மற்றும் ஜோ ரூஸோ சகோதரர்கள் இயக்கும் இப்படத்தை மார்வெல் ஸ்டுடியோஸ் தயாரிக்கிறது. கெவின் ஃபீஜ், லூயிஸ் டி’எஸ்போசிடோ மற்றும் ஜொனாதன் ஸ்வார்ட்ஸ் ஆகியோர் தயாரிப்புப் பணிகளை மேற்கொள்கின்றனர்.
இப்படத்தில் ராபர்ட் டவுனி ஜூனியர், கிறிஸ் எவன்ஸ், கிறிஸ் ஹெம்ஸ்வொர்த், பெட்ரோ பாஸ்கல், பால் ரூட், ஆண்டனி மேகி, ஃப்ளாரன்ஸ் பக், வனேசா கிர்பி, சிமு லியு, இயான் மெக்கெல்லன், ஹேலி அட்வெல், டாம் ஹிடில்ஸ்டன், பேட்ரிக் ஸ்டீவர்ட், ஜோசப் க்வின், செபாஸ்டியன் ஸ்டான், லெட்டிடியா ரைட், சானிங் டாட்டம் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.
பல பிரபஞ்சங்களைச் சேர்ந்த சூப்பர் ஹீரோக்கள் ஒன்றிணையும் இந்தக் கதையில், இதுவரை அவர்கள் சந்தித்திராத அளவுக்கு பேரழிவை ஏற்படுத்தக்கூடிய சக்திவாய்ந்த அச்சுறுத்தல் உருவாகிறது. வெவ்வேறு உலகங்கள் ஒன்றோடொன்று மோதும் சூழலில், உலகங்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் மிகப்பெரிய போர் உருவாகிறது.
புதிய புரோமோ மூலம் டாக்டர் டூமின் கதாபாத்திரம் மற்றும் அவரது பின்னணியைச் சுற்றியுள்ள எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ திரைப்படம் மார்வெல் ரசிகர்களுக்கு மிகப்பெரிய திரை விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ – டிசம்பர் 18, 2026 முதல் திரையரங்குகளில்!





