நாடு தழுவிய ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள புராண அதிரடி சாகச திரைப்படமான நாக பந்தம் ஜூலை 3ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை முன்னிட்டு இப்படத்திற்கான அதிகாரப்பூர்வ கவுண்ட் டவுன் தற்போது தொடங்கியுள்ளது.
இயக்குநர் அபிஷேக் நாமா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படம், புராணம், பண்டைய ரகசியங்கள், தெய்வீக சக்திகள் மற்றும் அதிரடியான சாகசங்களை மையமாகக் கொண்டு பிரம்மாண்டமான காட்சி மொழியில் உருவாகியுள்ளது. இதுவரை இந்திய திரையுலகில் காணப்படாத வித்தியாசமான சினிமா அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்கும் என படக்குழு உறுதியளிக்கிறது.
NIK ஸ்டுடியோஸ் மற்றும் அபிஷேக் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்த திரைப்படத்தை தயாரிப்பாளர்கள் கிஷோர் அன்னபுரெட்டி மற்றும் நிஷிதா நாகிரெட்டி தயாரித்துள்ளனர். உலக தரத்திலான தொழில்நுட்ப அம்சங்களுடன் உருவாகும் இந்த படம், உண்மையான பான் இந்திய பிரம்மாண்ட படைப்பாக உருவெடுத்துள்ளது.
படத்தில் நடிகர் விராட் கர்ணா சக்திவாய்ந்த முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவருடன் நபா நடேஷ், ஐஸ்வர்யா மேனன், ஜெகபதி பாபு , மகேஷ் மஞ்சரேக்கர், ரிஷப் சாவ்னி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
சமீபத்தில் வெளியிடப்பட்ட இப்படத்தின் போஸ்டர் மற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக பழங்குடியின மக்களின் கடல் போர் காட்சிகள், தீவிரமான சண்டை காட்சிகள் மற்றும் பிரம்மாண்டமான காட்சியமைப்புகள் ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தின. இப்படம் முழுமையான திரையரங்கு அனுபவத்தை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த அதிரடி சண்டைக் காட்சிகளை சர்வதேச அளவில் புகழ்பெற்ற சண்டை பயிற்சி இயக்குநர் விளாட் ரிம்பர்க் வடிவமைத்துள்ளார். பழங்குடியின போர்கள், கடல் போர்கள், நீருக்கடியில் நடைபெறும் சண்டைக் காட்சிகள் உள்ளிட்ட இதுவரை காணப்படாத சாகச தருணங்கள் இப்படத்தில் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் மற்றும் VFX பணிகள் தற்போது முழு வேகத்தில் நடைபெற்று வருகின்றன. பழங்கால கோயில்கள், மாய உலகங்கள், தெய்வீக காட்சிகள் மற்றும் பிரம்மாண்ட போர்க்களங்களை அதிநவீன விசுவல் எபெக்ட்ஸ்களின் மூலம் உயிர்ப்பிக்கும் பணியில் பல முன்னணி ஸ்டுடியோக்கள் ஈடுபட்டு வருகின்றன.
சமீப காலங்களில் இந்திய சினிமாவில் இருந்து வெளியாகும் மிகப்பெரிய காட்சி அனுபவங்களில் ஒன்றாக ‘நாக பந்தம்’ இருக்கும் என திரையுலக வட்டாரங்கள் ஏற்கனவே குறிப்பிடத் தொடங்கியுள்ளன.
இந்த உற்சாகத்தை மேலும் அதிகரிக்கும் வகையில் Zee Studios நிறுவனம் இப்படத்தின் வட இந்திய திரையரங்கு விநியோக உரிமைகளை கைப்பற்றியுள்ளது. மேலும் இந்தி சந்தையில் இப்படத்தை மிகப்பெரிய அளவில் வெளியிடவும் திட்டமிடப்பட்டுள்ளது.
அதேபோல், இப்படத்தின் டிஜிட்டல் உரிமையை Prime Video பெற்றுள்ளது. இது திரைப்படத்தின் மீதான வணிக நம்பிக்கையை பிரதிபலிப்பதாக கருதப்படுகிறது.
பண்டைய ரகசியங்கள், மறைக்கப்பட்ட புதையல்கள், தெய்வீக சக்திகள் மற்றும் மறக்கப்பட்ட புராணக் கதைகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘நாக பந்தம்’, இந்திய புராணங்களையும் கலாச்சாரத்தையும் அடிப்படையாகக் கொண்ட ஒரு கண்கவர் திரையரங்கு அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரம்மாண்ட காட்சிகள், விறுவிறுப்பான சண்டைகள், கற்பனைக்கு அப்பாற்பட்ட சாகசங்கள், சக்திவாய்ந்த இசை மற்றும் சுவாரஸ்யமான கதைக்களம் ஆகிய பல அம்சங்களால், இந்த படம் 2026ஆம் ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் பான் இந்திய திரைப்படங்களில் ஒன்றாக மாறியுள்ளது.





