கேபரேட் குயினாக ஆலியா பட்.. “லவ் & வார்” புதிய போஸ்டர்கள் வைரல்!

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவாகி வரும் ‘லவ் & வார்’ திரைப்படம், 2027-ம் ஆண்டில் வெளியாகவுள்ள முக்கியமான இந்தி படங்களில் ஒன்றாக எதிர்பார்க்கப்படுகிறது. ரன்பீர் கபூர், ஆலியா பட், விக்கி கௌஷல் என முன்னணி நட்சத்திரங்கள் இணைந்துள்ள இப்படத்தின் ஒவ்வொரு அப்டேட்டும் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகிறது.

படத்தின் முதல் போஸ்டர் வெளியானது முதலே ‘லவ் & வார்’ குறித்த எதிர்பார்ப்பு சமூக வலைதளங்களில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக ரன்பீர் கபூரின் கதாபாத்திர தோற்றங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில், தற்போது ஆலியா பட்டின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களும் வெளியாகியுள்ளன.

இந்த போஸ்டர்களில் ஆலியா பட், இதுவரை அவர் ஏற்றிராத வகையிலான நவீன கேபரேட் கலைஞர் தோற்றத்தில் காட்சியளிக்கிறார். முதல் போஸ்டரில் கவர்ச்சியான ஸ்லிட் ஸ்கர்ட் மற்றும் பிரத்யேக சிகை அலங்காரத்துடன் நாற்காலியில் அமர்ந்திருக்கும் ஆலியா பட், ஸ்டைலிஷான தோற்றத்தில் கவனம் ஈர்க்கிறார்.

மற்றொரு போஸ்டரில், ஒளிரும் கேபரேட் மேடையின் பின்னணியில் முற்றிலும் வித்தியாசமான தோற்றத்தில் ஆலியா பட் இடம்பெற்றுள்ளார். அவரது ஆடை, மேக்கப் மற்றும் காட்சியமைப்பு அனைத்திலும் சஞ்சய் லீலா பன்சாலியின் பிரம்மாண்டமான கலை வடிவமைப்பின் தனித்துவம் வெளிப்படுகிறது.

ஆலியா பட்டின் இந்த புதிய தோற்றங்கள் அவரது கதாபாத்திரம் குறித்த எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளன. இதுவரை அவர் நடித்த கதாபாத்திரங்களிலிருந்து மாறுபட்ட ஒரு புதிய பரிமாணத்தில் அவரை இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி காட்சிப்படுத்தியிருப்பது போஸ்டர்கள் மூலம் தெரிய வருகிறது.

ஏற்கனவே பல்வேறு கதாபாத்திரங்களில் தனது நடிப்புத் திறனை வெளிப்படுத்தியுள்ள ஆலியா பட், ‘லவ் & வார்’ படத்தில் எந்த மாதிரியான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது தற்போது ரசிகர்களின் முக்கிய கேள்வியாக மாறியுள்ளது. குறிப்பாக சஞ்சய் லீலா பன்சாலியுடன் அவர் மீண்டும் இணைந்திருப்பதும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட்டின் அடுத்தடுத்த கதாபாத்திர தோற்றங்கள் வெளியாகி வரும் நிலையில், படத்தின் கதை மற்றும் கதாபாத்திரங்கள் குறித்த புதிய தகவல்களை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். பன்சாலியின் பிரம்மாண்டமான திரைமொழியுடன் உருவாகி வரும் இப்படத்தில் இன்னும் பல ஆச்சரியங்கள் இருக்கலாம் என்ற எதிர்பார்ப்பும் உருவாகியுள்ளது.

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கும் ‘லவ் & வார்’ படத்தில் ரன்பீர் கபூர், ஆலியா பட் மற்றும் விக்கி கௌஷல் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படம் 2027 ஜனவரி 21-ம் தேதி உலகம் முழுவதும் இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகிறது.