2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி, இந்தியாவுக்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்த்த தடகள வீராங்கனை வித்யா ராமராஜை நடிகர் தனுஷ் நேரில் சந்தித்து பாராட்டினார்.
மகளிர் 4×400 மீட்டர் ரிலே போட்டியில் தங்கப் பதக்கமும், Mixed 4×400 மீட்டர் ரிலேவில் வெள்ளிப் பதக்கமும், 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் வெண்கலப் பதக்கமும் வென்று மொத்தம் மூன்று பதக்கங்களை வித்யா ராமராஜ் கைப்பற்றியுள்ளார்.
அவரது இந்த சாதனையைப் பாராட்டிய நடிகர் தனுஷ், வித்யா ராமராஜை நேரில் சந்தித்து தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்ததுடன், தொடர்ந்து பல்வேறு வெற்றிகளைப் பெற வேண்டும் என்றும் வாழ்த்தினார்.
இந்த சந்திப்பின்போது Chennai District Masters Athletic Association தலைவர் திரு. M. செண்பகமூர்த்தி (Red Giant Movies) மற்றும் வித்யா ராமராஜின் பயிற்சியாளர் நேபால் சிங் ஆகியோர் உடனிருந்தனர்.






