Roll Time Studios சார்பில் தயாராகி வரும் ‘மேடி’ திரைப்படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் தற்போது வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. தயாரிப்பாளர் கலையரசு தயாரிக்கும் இப்படத்தில் ரியோ ராஜ் மற்றும் சானியா அய்யப்பன் இணைந்து நடித்துள்ளனர்.
படப்பிடிப்பு தொடங்கிய நாள் முதலே விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது இறுதிக்கட்ட காட்சிகளும் படமாக்கப்பட்டு பணிகள் முழுமையாக முடிவடைந்துள்ளன. இப்படத்தில் மலையாள நடிகர் அஜு வர்கீஸ், மிர்ச்சி விஜய், சிங்கம்புலி மற்றும் கார்த்திகா முரளிதரன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் ‘மேடி’ உருவாகி வருகிறது. வித்தியாசமான கதை, சுவாரஸ்யமான திரைக்கதை மற்றும் பிரம்மாண்டமான காட்சியமைப்புகளுக்கு முக்கியத்துவம் அளித்து படக்குழு பணியாற்றியுள்ளது. ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை வழங்கும் நோக்கில் படத்தின் ஒவ்வொரு அம்சமும் கவனமாக உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை நேரு விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமான அரங்கம் அமைக்கப்பட்டு முக்கியமான காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. இதனுடன் படத்தின் முழு படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ளது.
‘மேடி’ திரைப்படத்தின் மூலம் கார்த்திகேயன் இயக்குநராக அறிமுகமாகிறார். இப்படத்திற்கு திபு நினன் தாமஸ் இசையமைக்க, கிஷோர் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார்.
படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், ‘மேடி’ திரைப்படம் தொடர்பான அடுத்தடுத்த முக்கிய அறிவிப்புகள் மற்றும் புதிய தகவல்கள் Roll Time Studios சார்பில் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.





