வித்தியாசமான கதைகள் மற்றும் புதுமையான நிகழ்ச்சிகள் மூலம் தொடர்ந்து ரசிகர்களை மகிழ்வித்து வரும் ZEE தமிழ், இந்த வார இறுதியை மேலும் சிறப்பாக்கும் வகையில் இரண்டு புதிய நிகழ்ச்சிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இசை ரசிகர்களின் வரவேற்பைப் பெற்ற ‘சரிகமப’ நிகழ்ச்சியின் புதிய சீசனும், மாஸ் மற்றும் கிளாஸ் என இரு அணிகளுக்கு இடையிலான கலகலப்பான போட்டியை மையமாகக் கொண்ட ‘மாஸ் பசங்க Vs கிளாஸ் பொண்ணுங்க’ நிகழ்ச்சியும் தற்போது ஒளிபரப்புக்கு தயாராகியுள்ளன.
இந்த இரண்டு நிகழ்ச்சிகளின் தொடக்கத்தை முன்னிட்டு நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், ‘சரிகமப’ நடுவர்களான ஸ்ரீனிவாஸ், விஜய் பிரகாஷ், ஸ்வேதா மோகன், தொகுப்பாளர் அர்ச்சனா, ‘மாஸ் பசங்க Vs கிளாஸ் பொண்ணுங்க’ நிகழ்ச்சியின் நடுவர்களான ஆர்யா மற்றும் ரெஜினா கசாண்ட்ரா உள்ளிட்டோர் கலந்து கொண்டு நிகழ்ச்சிகளின் சிறப்பம்சங்களை பகிர்ந்து கொண்டனர்.
புதிய சீசனில் பிரம்மாண்டமாகும் ‘சரிகமப’
பத்து சீசன்களை கடந்து ரசிகர்களின் ஆதரவை பெற்றுள்ள ‘சரிகமப’, திறமையான பாடகர்களை அறிமுகப்படுத்துவதுடன், அவர்களின் இசைப் பயணத்திற்கு முக்கியமான தளமாகவும் இருந்து வருகிறது. சமீபத்தில் 500 எபிசோட்களை கடந்ததை முன்னிட்டு கோவையில் பிரம்மாண்டமான வெற்றி விழாவும் நடைபெற்றது.
ஒவ்வொரு சீசனிலும் புதிய குரல்கள் மற்றும் வித்தியாசமான இசை நிகழ்வுகளை வழங்கி வரும் இந்த சீசனிலும் ஏராளமான திறமையான போட்டியாளர்கள் பங்கேற்கின்றனர். இசைத்துறையில் பிரபலமான ஸ்ரீனிவாஸ், விஜய் பிரகாஷ் மற்றும் ஸ்வேதா மோகன் நடுவர்களாகவும், அர்ச்சனா தொகுப்பாளராகவும் இணைந்துள்ளனர்.
Srinivas – Judge, Sa Re Ga Ma Pa
பத்து வருஷமா இந்த ஷோல ஒரு பகுதியா இருக்கேன். அது எனக்கு ரொம்ப சந்தோஷம். சாமானியர்களை சாதனையாளராக மாற்றும் மேடை தான் இந்த சரிகமப. கிராமங்களில் இருந்து வரவங்க அவங்க ஜெயிக்கும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கும். எத்தனையோ ஷோவில் நடுவராக இருந்திருக்கேன். ஆனால் இப்படி ஒரு பிரம்மாண்டத்தை பார்த்ததில்லை அந்த அளவுக்கு இந்த சீசன் மிகப் பிரமாண்டமாக இருக்கு என்றார்.
Vijay Prakash – Judge :
பல வருடங்களுக்கு முன்னாடி இதே சரிகமப show-ல் ஒரு contestant-ஆக வந்த நான், இன்று நடுவராக இந்த show-ன் ஒரு பகுதியாக இருக்கிறேன் என்பதில் பெருமை கொள்கிறேன் என்றார்.
மேலும் இந்த show நிறைய பேருக்கு ஒரு career-ஐயும், ஒரு வாழ்க்கையையும் கொடுத்திருக்கிறது. இங்கிருந்து வந்த contestants இன்று உலகம் முழுவதும் perform பண்ணிட்டு இருக்காங்க. அதுதான் Sa Re Ga Ma Pa-வோட reach.
இந்த season-ன் stage, visuals, production எல்லாமே மிகப்பெரிய scale-ல இருக்கு. எப்போதும் show-வோட soul மட்டும் எப்போதும் மாறாமல் இருப்பது தான் இதன் சிறப்பு.
Shwetha Mohan – Judge, Saregamapa:
இந்த season-ல் முதல் முறையாக ஒரு 360-degree set-ல் Sa Re Ga Ma Pa-வை பார்க்கப்போறோம். எங்க திரும்பினாலும் music-ஐ feel பண்ணக்கூடிய அளவுக்கு set ரொம்ப பிரம்மாண்டமா இருக்கு. எனக்கு Sa Re Ga Ma Pa குடும்பம் ஒரு கூட்டில் வாழும் கிளிகள் மாதிரி தான். Contestants-க்கு நாங்க நடுவர்களாக மட்டும் இல்லாமல், mentors, friends, guides-ஆவும் இருக்கிறோம். மக்கள் இந்த show-க்கும், contestants-க்கும் கொடுக்கிற அன்பு எங்களுக்கு மிகப்பெரிய பலம் என்றார்.
சரிகமப நிகழ்ச்சி குறித்து நடுவர்கள் பேசி முடித்ததை தொடர்ந்து மாஸ் பசங்க vs கிளாஸ் பொண்ணுங்க நிகழ்ச்சி குறித்து பேச தொடங்கினர்.
“இது 100 percent out-and-out fun & entertainment guaranteed show!” – ஆர்யா
நிகழ்ச்சி குறித்து ஆர்யா பேசும்போது,
இது 100 percent out-and-out fun and entertainment guaranteed show.
ரொம்ப interesting-ஆன lineup-ல male and female celebrity contestants இருக்காங்க. மாஸ் பசங்கவும் கிளாஸ் பொண்ணுங்கவும் அவங்களோட style, attitude, emotions, talent-னு எல்லாத்தையுமே express பண்ணப்போறாங்க.
இது வெறும் competition மட்டும் கிடையாது. Fun, friendship, ஜாலியான moments-னு நிறைய விஷயங்கள் இந்த show-ல இருக்கும் என்றார்.
நிகழ்ச்சி குறித்து ரெஜினா கசாண்ட்ரா பேசும்போது,
ஆர்யா சொன்ன மாதிரி, எனக்கும் இந்த title கேட்ட போதே ஒரு curiosity இருந்துச்சு. கூடவே ஒரு doubt-ம் இருந்துச்சு.
இந்த show-க்கு ஏன் ‘மாஸ் பசங்க Vs கிளாஸ் பொண்ணுங்க’னு title வச்சாங்க? ஏன் ‘கிளாஸ் பொண்ணுங்க Vs மாஸ் பசங்க’னு வைக்கலாமே?
ஆர்யாதான் இப்படித் title வைக்க சொல்லியிருப்பாரோன்னு ஒரே சந்தேகம் இருக்கு!”
என சிரித்தபடி குறிப்பிட்டார்.
ZEE தமிழ்ல இப்படியொரு fresh concept-ல ஒரு show வர்றதுல எனக்கும் ரொம்ப மகிழ்ச்சி.
‘மாஸ் பசங்க Vs கிளாஸ் பொண்ணுங்க’ – competition எப்படி இருந்தாலும், entertainment-க்கு பஞ்சமே இருக்காது என்றார்.
இந்த இரண்டு நிகழ்ச்சிகள் குறித்துப் பேசிய ZEE தமிழ் Chief Channel Officer திரு. வி.எஸ். ராகவன்,
ZEE Tamizh தொடர்ந்து புதிய, வித்தியாசமான நிகழ்ச்சிகளை audience-க்கு கொடுத்துக்கிட்டு வருகிறோம். அந்த வகையில், இன்று Sa Re Ga Ma Pa மற்றும் Mass Pasanga Vs Class Ponnunga என்ற இரண்டு புதிய shows-ஐ launch பண்ணுகிறோம்.
Sa Re Ga Ma Pa வெறும் singing show கிடையாது; பல பேருடைய talent மற்றும் கனவுகளுக்கு ஒரு பெரிய platform.இந்த புதிய season இன்னும் பிரம்மாண்டமாகவும், music, emotion, entertainment நிறைந்ததாகவும் இருக்கும்.
இந்த journey-க்கு நம்ம judges Vijay prakash, Srinivas மற்றும் Shweta Mohan-ன் support மிகப்பெரிய strength. அதேபோல், Sa Re Ga Ma Pa மூலமாக entertainment-ஐ தாண்டி பல சமூக மாற்றங்களையும் கொண்டு வந்திருக்கிறோம் என்பதில் என்றும் பெருமை கொள்கிறோம்.
Mass Pasanga Vs Class Ponnunga ஒரு fun-filled entertainment show மட்டுமல்ல; ஆண், பெண் இருவருடைய differences-ஐ புரிந்துகொண்டு, ஒருவரை ஒருவர் appreciate பண்ணிக்கொள்ளும் ஒரு புதிய experience.
இந்த show-க்கு Arya மற்றும் Regena mentor மற்றும் role model-ஆக இணைந்திருப்பது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி.
இந்த இரண்டு shows-ம் audience-க்கு புதிய experience-ஐ கொடுக்கும் என்று நம்புகிறோம்.
Kaushik Narasimhan – Programming Head பேசியதாவது
இந்த இரண்டு shows-ம் இதுவரை நீங்கள் பார்த்திராத அளவுக்கு ஒரு பெரிய scale-ல் உருவாக்கப்பட்டிருக்கிறது.
Sa Re Ga Ma Pa இன்று ZEE Tamizh-ன் ஒரு முக்கியமான அடையாளமாக மாறியிருக்கிறது. இந்த புதிய season இன்னும் பிரம்மாண்டமாகவும், audience எல்லாரும் ரசிக்கிற மாதிரியும் இருக்கும்.
அதேபோல், Mass Pasanga Vs Class Ponnunga முழுக்க முழுக்க fun, energy மற்றும் entertainment நிறைந்த ஒரு புதிய experience-ஆக இருக்கும் என்றார்.
ஸ்ரீனிவாஸ், விஜய் பிரகாஷ் மற்றும் ஸ்வேதா மோகன் நடுவர்களாகவும், அர்ச்சனா தொகுப்பாளராகவும் இணைந்து வழங்கும் சரிகமப நிகழ்ச்சி சனி & ஞாயிறு இரவு 7.00 மணிக்கு ZEE தமிழில் ஒளிபரப்பாகிறது.
மாஸ்-ஐ கொண்டாடவும், கிளாஸை ரசிக்கவும் ஆர்யா மற்றும் ரெஜினா கசாண்ட்ரா இணையும் ‘மாஸ் பசங்க Vs கிளாஸ் பொண்ணுங்க’…
கிகி விஜய் மற்றும் அசார் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சி ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இரவு 8.30 மணிக்கு ZEE தமிழில் ஒளிபரப்பாகிறது.
இந்த இரண்டு நிகழ்ச்சிகளையும் ZEE தமிழில் பார்க்க மறக்காதீங்க!





