பிரம்மாண்டமான திரைப்படங்களை தயாரித்து, வெற்றிகரமான படங்களை விநியோகித்து வரும் Romeo Pictures நிறுவனம், Aviate Pictures நிறுவனத்தின் கோகுல் ஸ்ரீனிவாசனுடன் இணைந்து புதிய திரைப்படம் ஒன்றை தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது.
‘ரைட்டர்’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநரும், ‘DC’ படத்தின் எழுத்தாளருமான ஃபிராங்க்ளின் ஜேக்கப் இப்படத்தை இயக்குகிறார். இளைய திலகம் பிரபு மற்றும் விஜய் வர்மா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க, ஷிவாத்மிகா ராஜசேகர் கதாநாயகியாக நடிக்கிறார். Romeo Pictures நிறுவனத்தின் ராகுலும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
டார்க் ஹியூமர் பின்னணியில் உருவாகும் இப்படம், வித்தியாசமான கதைக்களத்துடன் திரில்லர் மற்றும் காமெடியை இணைத்து உருவாக்கப்படவுள்ளது. அனுபவம் வாய்ந்த நடிகர்களுடன் இளம் தலைமுறை நட்சத்திரங்கள் இணைவதால், இப்படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
படப்பிடிப்பு தொடங்கிய முதல் நாளிலேயே நடிகர் விக்ரம் பிரபு மற்றும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் ஆகியோர் படப்பிடிப்புத் தளத்திற்கு நேரில் சென்று படக்குழுவினரை சந்தித்தனர். புதிய படத்தின் தொடக்கத்தையொட்டி அவர்கள் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்ததுடன், படக்குழுவினருக்கு உற்சாகமும் அளித்தனர்.
மேலும், முத்துக்குமார், ரமேஷ் திலக், திலீப் சுப்பராயன், தீனா, அருண் மாதேஸ்வரன், கவிதா பாரதி, அவினாஷ் ரகுதேவன் உள்ளிட்ட பலரும் இப்படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். பிரதீப் காளிராஜா ஒளிப்பதிவைக் கவனிக்கிறார். படத்தொகுப்புப் பணிகளை பிரசன்னா G.K மேற்கொள்கிறார். P.C. ஸ்டன்ட்ஸ் சண்டைக் காட்சிகளை வடிவமைக்கிறார். பாடல்களுக்கு யுகபாரதி வரிகள் எழுதுகிறார்.
நவ்ஷாத் அகமது ஆடை வடிவமைப்பையும், சக்தி வெங்கட்ராஜ் M கலை இயக்கத்தையும் மேற்கொள்கின்றனர்.
வித்தியாசமான கதைக்களம், அனுபவம் வாய்ந்த நடிகர் பிரபுவுடன் இணையும் இளம் தலைமுறை கலைஞர்கள் மற்றும் திறமையான தொழில்நுட்பக் குழு என பல்வேறு அம்சங்களுடன் உருவாகும் இப்படம், ரசிகர்களுக்கு புதிய வகையான திரையரங்க அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படத்தின் தலைப்பு உள்ளிட்ட முக்கியமான தகவல்கள் அனைத்தும் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.





