Zion Films சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் MRP Entertainment இணைந்து வழங்கும் புதிய திரைப்படத்திற்கு ‘கமல் ஸ்ரீதேவி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. பசிலியான் நாசரேத் மற்றும் மகேஷ் ராஜ் பசிலியான் தயாரிக்கும் இப்படத்தில் பிரபுதேவா, சிம்ரன் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இவர்களுடன் மிதுன் ஜெய் சங்கர், ஸ்மேகா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்துள்ளனர்.
முன்னதாக, இந்த இரு நிறுவனங்களின் கூட்டணியில் வெளியான ‘வித் லவ்’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றியடைந்தது. இதனைத் தொடர்ந்து, மீண்டும் இரு நிறுவனங்களும் இணைந்து ‘கமல் ஸ்ரீதேவி’ திரைப்படத்தை வழங்குவது குறிப்பிடத்தக்கது.
குடும்பத்துடன் அமர்ந்து ரசிக்கும் வகையில், மனதைத் தொடும் வித்தியாசமான காதல் கதையாக இப்படம் உருவாகி வருகிறது. மூணாறு மற்றும் சென்னையில் ஒரே கட்டமாகப் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
இப்படத்தை கிருஷ்ணானந்த் கொட்டாரப்பட்டு எழுதி இயக்குகிறார். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்க, சரண் வேலாயுதன் ஒளிப்பதிவைக் கையாள்கிறார். ராஜா ஆறுமுகம் படத்தொகுப்புப் பணிகளை மேற்கொள்கிறார். ராஜீவன் தயாரிப்பு வடிவமைப்பையும், சேகர் கலை இயக்கத்தையும் கவனிக்கின்றனர். அனுவர்தன் மற்றும் நவா ராஜ்குமார் ஆடை வடிவமைப்பாளர்களாகப் பணியாற்றுகின்றனர். மகேஷ் மேத்யூ சண்டைக் காட்சிகளை வடிவமைக்கிறார்.
விளம்பரப் புகைப்படங்களை கேமரா செந்திலும், படப்பிடிப்புத் தளப் புகைப்படங்களை மணியனும் மேற்கொள்கின்றனர். R.J. சுரேஷ் குமார் தயாரிப்பு மேலாளராகப் பணியாற்றுகிறார். கோபி பிரசன்னா விளம்பர வடிவமைப்பையும், சுரேன் ஜி மற்றும் அழகியகூத்தன் ஒலி வடிவமைப்பையும் கவனிக்கின்றனர். சிவகாந்த் தலைமை இணை இயக்குநராகவும், தினேஷ் E. இணை இயக்குநராகவும் பணியாற்றுகின்றனர். யுவராஜ் மக்கள் தொடர்புப் பணிகளைக் கவனிக்கிறார். பிரசாந்த் செயல் தயாரிப்பாளராகவும், சரத் J. சாமுவேல் இணைத் தயாரிப்பாளராகவும் இணைந்துள்ளனர்.
‘குட் நைட்’, ‘லவ்வர்’, ‘டூரிஸ்ட் ஃபேமிலி’, ‘வித் லவ்’ எனத் தொடர்ந்து கவனம் ஈர்க்கும் படங்களை வழங்கிய MRP Entertainment நிறுவனம், தனது அடுத்த படைப்பாக ‘கமல் ஸ்ரீதேவி’ திரைப்படத்தை உருவாக்குகிறது. இப்படத்தை Zion Films சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் இணைந்து வழங்குகிறார்.
படத்தின் தலைப்பு தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ள நிலையில், பிரபுதேவா – சிம்ரன் கூட்டணியில் உருவாகும் இந்தக் காதல் திரைப்படத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகளை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.





