நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் சூழ நடைபெற்ற ப்ரியா – ராஜ் திருமணம்!

தனது வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ள மகிழ்ச்சியான தருணத்தை அன்பும் நன்றியும் கலந்த மனதுடன் பகிர்ந்துள்ளார் ப்ரியா.

நவம்பர் 11-ம் தேதியான இன்று, குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் ப்ரியா – ராஜ் இருவருக்கும் திருமணம் இனிதே நடைபெற்றுள்ளது. எளிமையான முறையில், தங்களுக்கு நெருக்கமானவர்களின் அன்பான வாழ்த்துகளுடன் இந்தத் திருமண நிகழ்வு நடைபெற்றுள்ளது.

தனது திருமணச் செய்தியைப் பகிர்ந்துள்ள ப்ரியா, இத்தனை ஆண்டுகளாகத் தனது பயணத்தில் துணையாக இருந்து, அன்பும் ஆதரவும் வழங்கி வந்த பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளார்.

நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே பங்கேற்கும் வகையில் திருமணத்தைச் சிறிய நிகழ்வாக ஏற்பாடு செய்ததால், அனைவரையும் நேரில் அழைக்க முடியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த இனிய வாழ்க்கைப் பயணத்தின் தொடக்கத்தில் ஊடக நண்பர்கள் அனைவரின் அன்பையும் வாழ்த்துகளையும் எதிர்பார்ப்பதாகவும், அவர்களின் அன்பு என்றும் தங்களுடன் தொடர வேண்டும் என்றும் ப்ரியா – ராஜ் தம்பதியினர் தெரிவித்துள்ளனர்.

புதிய வாழ்க்கையைத் தொடங்கியுள்ள ப்ரியா – ராஜ் தம்பதியினருக்கு திரையுலகினர், நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.