ராம் போதினேனி தனது திரைப்பயணத்தில் புதிய பரிமாணத்தை எட்டியுள்ளார். எனர்ஜிடிக் ஸ்டாராக ரசிகர்களால் கொண்டாடப்படும் ராம் போதினேனி, தற்போது தனது 23வது படமான #RAPO23 மூலம் இயக்குநராக அறிமுகமாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Rapo Cinematics பேனரில் உருவாகும் இப்படத்தை கிருஷ்ணா போதினேனி தயாரிக்கிறார். ராமின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள ஸ்டைலிஷ் போஸ்டர், ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் ‘வீரா’ என்ற கதாபாத்திரத்தில் ராம் போதினேனி மிரட்டலான தோற்றத்தில் காட்சியளிக்கிறார்.
பல்வேறு விதமான கதாபாத்திரங்கள் மூலம் தனது திறமையை நிரூபித்து வந்த ராம் போதினேனி, தனது முந்தைய படமான “ஆந்திரா கிங் தாலுகா”வில் பாடல் வரிகள் எழுதி கவனம் பெற்றதுடன், பின்னணிப் பாடகராகவும் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார். தற்போது இயக்குநராகவும் புதிய முயற்சியில் களமிறங்கியுள்ளார்.
#RAPO23 திரைப்படம் ஸ்டைலிஷ் சைக்கலாஜிக்கல் ஆக்ஷன் த்ரில்லராக உருவாக உள்ளது. தெலுங்கு சினிமாவில் அரிதாக முயற்சிக்கப்படும் இந்த ஜானர், அறிவிப்பு வெளியான தருணத்திலேயே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
பிறந்தநாள் ஸ்பெஷல் போஸ்டரில், லெதர் ஜாக்கெட்டுடன் பின்னால் நின்று கொண்டிருக்கும் ராமின் தோற்றம், படத்தின் டார்க் மற்றும் இன்டென்ஸ் மனநிலையை வெளிப்படுத்துகிறது. அவரது புதிய V-cut ஹேர் ஸ்டைலும் ரசிகர்களிடையே பேசுபொருளாகியுள்ளது.
போஸ்டரின் பின்னணியில் இடம்பெற்றுள்ள பிரம்மாண்ட சிவப்பு நிற “V”, ‘வீரா’ கதாபாத்திரத்தையும், போராட்டம் மற்றும் ஆதிக்கத்தையும் குறிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. “The Story of a Lone Wolf” என்ற டேக் லைன், தனிமை, உளவியல் போராட்டம் மற்றும் சிக்கலான மனநிலையுடன் நகரும் கதாநாயகனை சுட்டிக்காட்டுகிறது.
இந்த படத்தின் மூலம் நடிகர்-இயக்குநர்களான N. T. ராமா ராவ், கிருஷ்ணா மற்றும் பவன் கல்யாண் ஆகியோரின் வரிசையில் ராம் போதினேனியும் இணைகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
#RAPO23 படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதத்தில் தொடங்கவுள்ளது. இந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினரின் விவரங்கள் விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.





