“96” இயக்குநருடன் இணையும் பகத் பாசில்… எதிர்பார்ப்பை கிளப்பிய புதிய படம்

Vels Film International தயாரிப்பில், “96” மற்றும் “மெய்யழகன்” படங்களின் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் C. Prem Kumar இயக்கத்தில், Fahadh Faasil நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்தின் பூஜை இன்று கோலாகலமாக நடைபெற்றது.

ஐசரி K. கணேஷ் தலைமையிலான வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் 32வது தயாரிப்பாக உருவாகும் இந்த திரைப்படம், ஆரம்ப கட்டத்திலேயே ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான பகத் பாசில், தனித்துவமான கதைகள் மற்றும் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து தொடர்ந்து வெற்றிப்படங்களை வழங்கி வருகிறார். அதேபோல், உணர்ச்சிப்பூர்வமான கதைக்களங்கள் மற்றும் இயல்பான திரைக்கதைகளால் ரசிகர்களின் மனதை கவர்ந்த இயக்குநர் C. பிரேம்குமார் இணையும் இந்த புதிய கூட்டணி, திரையுலகில் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது.

தமிழ் சினிமாவில் தரமான மற்றும் வணிகரீதியாக வெற்றிபெற்ற பல திரைப்படங்களை தொடர்ந்து வழங்கி வரும் வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம், முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து பல்வேறு கதைக்களங்களில் திரைப்படங்களை தயாரித்து வருகிறது. தற்போது இந்த புதிய முயற்சியின் மூலம் மீண்டும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

“96”, “மெய்யழகன்” போன்ற படங்கள் மூலம் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிய இயக்குநர் பிரேம்குமார், எளிமையான காட்சியமைப்பு, மனதை வருடும் கதாபாத்திரங்கள் மற்றும் உணர்வுப்பூர்வமான திரைக்கதைகளுக்காக பெரிதும் பாராட்டப்பட்டவர். இந்த புதிய படத்திலும் அதேபோன்ற வித்தியாசமான மற்றும் மனதை தொடும் அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், இயக்குநர் பிரேம்குமாரின் முந்தைய படங்களுக்கு இசையமைத்த Govind Vasantha இப்படத்திற்கும் இசையமைக்கிறார். இந்த தகவலும் ரசிகர்களிடையே கூடுதல் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இப்படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. புதிய கூட்டணியால் உருவாகும் இந்த திரைப்படம், தற்போது தமிழ் மற்றும் மலையாள சினிமா ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.