உலகம் முழுவதும் மார்வெல் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ திரைப்படம், வரும் டிசம்பர் 17ஆம் தேதி இந்தியத் திரையரங்குகளில் வெளியாகிறது. ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய நான்கு மொழிகளில் வெளியாகவுள்ள இப்படம், 4DX, RealD 3D, ScreenX, டால்பே மற்றும் மார்வெல் ஸ்டுடியோஸின் பிரத்யேக இன்ஃபினிட்டி விஷன் உள்ளிட்ட பிரீமியம் திரையரங்கத் தொழில்நுட்பங்களில் ரசிகர்களை மகிழ்விக்கத் தயாராகி வருகிறது.
படத்தின் வெளியீட்டுத் தேதி நெருங்கி வரும் நிலையில், மார்வெல் ஸ்டுடியோஸ் புதிதாக ஐந்து போஸ்டர்களை வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர்கள் ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளன. குறிப்பாக, மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸின் சக்திவாய்ந்த வில்லன்களில் ஒருவரான டாக்டர் டூமின் தோற்றம் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.
முன்னணி நட்சத்திரங்கள் பலர் இணைந்துள்ள இப்படத்தில் பிரம்மாண்டமான ஆக்ஷன் காட்சிகளும், விறுவிறுப்பான கதைக்களமும் முக்கிய அம்சங்களாக இடம்பெறுகின்றன. மார்வெல் திரைப்படங்களுக்கே உரிய பிரமாண்டமான காட்சியமைப்புகள், அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் சுவாரஸ்யமான கதை சொல்லல் ஆகியவற்றின் மூலம் ரசிகர்களுக்கு ஒரு சிறப்பான திரையரங்க அனுபவத்தை வழங்க படக்குழு தயாராகி வருகிறது.
மார்வெல் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ திரைப்படம் டிசம்பர் 17ஆம் தேதி இந்தியா முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.





