“கட்டா குஸ்தி 2” தான் என் கேரியரின் மிகப்பெரிய லாபப்படம் – விஷ்ணு விஷால்

நடிகர் விஷ்ணு விஷால், காமெடி திரைப்படங்களின் முக்கியத்துவம் குறித்து பேசியதுடன், தனது திரைப்பயணத்தில் மிகப்பெரிய வணிக வெற்றியைப் பெற்ற படமாக ‘கட்டா குஸ்தி 2’ அமைந்துள்ளதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், படங்கள் எடுக்கலாம், அதற்காக காமெடி படங்கள் எடுக்காமல் இருக்க கூடாது. இதுபோன்ற படங்கள் அதிகம் வெளியாக வேண்டும். ஒரு வருடம் அல்லது இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை ஒரு காமெடி படத்திலாவது நடிக்க வேண்டும் என்ற முடிவில் நான் இருக்கிறேன்.” என்றார்.

முதல் பாகத்திற்கும் ‘கட்டா குஸ்தி 2’-வுக்குமான வியாபாரத்தில் முன்னேற்றம் இருக்கிறதா ? என்ற கேள்விக்கு பதில் அளித்த விஷ்ணு விஷால், “நிச்சயமாக இருக்கிறது. என்னுடைய படங்களில் அதிகம் லாபம் கொடுத்த மற்றும் பெரிய வியாபாரம் ஆன படம் இது தான். இதை நான் சொல்ல கூடாது, ஐசரி கணேஷ் சார் தான் சொல்ல வேண்டும். அவர் இங்கு இல்லை எனவே சொல்கிறேன். அவர் படம் பார்த்துவிட்டு என்னிடம் சொன்னது, “என் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியான படங்களில் ‘கட்டா குஸ்தி 2’ மிகச்சிறந்த படம்” என்று சொன்னார். வியாபார அளவில் அவருக்கு பெரிய லாபம் கிடைத்திருக்கிறது, அது எவ்வளவு கோடி என்று சொல்ல முடியாது. ஆனால், என் படங்களில் ‘கட்டா குஸ்தி 2’ மிகப்பெரிய லாபம் ஈட்டிய படம்.

முதல் பாகம் வெற்றி என்பதால், இரண்டாம் பாகத்தை இரண்டு மடங்கு பட்ஜெட்டில் தயாரிக்கவில்லை, நியாயமான பட்ஜெட் என்னவோ அதில் தயாரித்தேன். அதற்கு கிடைத்த லாபம் மிகப்பெரியது. என் படங்களில் அதிகமான வியாபாரம் மற்றும் மிகப்பெரிய லாபம் கொடுத்த படம் என்றால் அது ‘கட்டா குஸ்தி 2’ தான், அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.” என்று உற்சாகமாக தெரிவித்தார்.