இசையமைப்பாளர் சாம் சி.எஸ் தனது தனித்துவமான இசை முயற்சிகளால் தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வரும் நிலையில், தற்போது ‘இம்மார்டல்’ (Immortal) திரைப்படத்திலிருந்து வெளியாகியுள்ள “லவ் யூ லவ் யூ காட்டேரி” பாடல் இசை ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
AK Film Factory சார்பில் அருண்குமார் தனசேகரன் தயாரிக்கும் இந்த திரைப்படத்தில் ஜிவி பிரகாஷ் குமார் மற்றும் கயாடு லோஹர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அறிமுக இயக்குநர் மாரியப்பன் சின்னா இயக்கும் இப்படம் ஃபேண்டஸி திரில்லர் ஜானரில் உருவாகி வருகிறது.
படத்தின் முதல் பாடலாக வெளியாகியுள்ள “லவ் யூ லவ் யூ காட்டேரி”, வழக்கமான காதல் பாடல்களிலிருந்து வித்தியாசமான அனுபவத்தை வழங்குகிறது. காதலியை “காட்டேரி”யாக கற்பனை செய்து வர்ணிக்கும் இந்தப் பாடலின் வரிகளை ஷாலி சி எழுதியுள்ளார். பாடலை சாம் சி.எஸ் மற்றும் ரேஷ்மா ஷ்யாம் இணைந்து பாடியுள்ளனர்.
மனதில் எளிதில் பதியும் மெலடி, டார்க் தீமில் வடிவமைக்கப்பட்ட இசை அமைப்பு மற்றும் புதுமையான சவுண்ட் டிசைன் ஆகியவை பாடலுக்கு தனித்துவமான அடையாளத்தை வழங்குகின்றன. சாம் சி.எஸ்-ன் இசை பாணியில் உருவான இந்த பாடல், காதல் மற்றும் மர்மம் கலந்த புதிய இசை அனுபவத்தை ரசிகர்களுக்கு அளிக்கிறது.
சிவப்பு நிற பின்னணி, டார்க் விஷுவல் டோன் மற்றும் கவர்ச்சிகரமான நடன அமைப்புகளுடன் பாடல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இசை, காட்சியமைப்பு மற்றும் நடனம் ஆகியவை ஒன்றோடொன்று இணைந்த விதம் பாடலின் ஈர்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.
குறிப்பாக இளைஞர்களை கவரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள “லவ் யூ லவ் யூ காட்டேரி”, வெளியான சில மணி நேரங்களிலேயே சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகிறது. பாடல் முடிந்த பிறகும் அதன் மெலடியும் தாளமும் ரசிகர்களின் மனதில் நீடிக்கும் வகையில் அமைந்துள்ளது.
கதையின் உணர்வுகளை இசையின் மூலம் ரசிகர்களிடம் கொண்டு சேர்ப்பதில் வல்லவரான சாம் சி.எஸ், இந்தப் பாடலிலும் தனது புதுமையான இசை கையொப்பத்தை பதித்து, ‘இம்மார்டல்’ திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ளார்.





