“ஜாலியா இருந்த ஒருத்தன்” படத்தின் வெளியீட்டை உறுதி செய்த மாலிக் ஸ்ட்ரீம்ஸ் – ஏஜிஎஸ் கூட்டணி!

இயக்குநர் ராஜேஷ். எம் இயக்கத்தில், நடிகர் ஜீவா கதாநாயகனாக நடித்துள்ள ‘ஜாலியா இருந்த ஒருத்தன்’ திரைப்படம் விறுவிறுப்பாக உருவாகி வருகிறது. இந்த படத்தில் ஜீவாவுடன் இவானா, பரிதாபங்கள் சுதாகர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவை எம். சுகுமார் மேற்கொண்டுள்ள நிலையில், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். முழுமையான கமர்ஷியல் பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகும் இந்தப் படத்தை, மலேசியாவைச் சேர்ந்த மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் டத்தோ அப்துல் மாலிக் பிரம்மாண்டமான தயாரிப்புச் செலவில் உருவாக்கியுள்ளார்.

சமீபத்தில் வெளியிடப்பட்ட படத்தின் ப்ரோமோ வீடியோ ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து, படத்தின் வெளியீட்டு உரிமையை ஏஜிஎஸ் நிறுவனம் பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

இந்த அறிவிப்பை, மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்ப்பரேஷன் இந்தியா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ராசிக் அஹ்மது, தனது சமூக வலைதளப் பதிவின் மூலம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார்.

இதன் மூலம், ‘ஜாலியா இருந்த ஒருத்தன்’ திரைப்படம் ஏஜிஎஸ் நிறுவனத்தின் வெளியீட்டில் பிரம்மாண்டமாக திரையரங்குகளை அடையவுள்ளது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.