“ஊடகங்கள் வழங்கிய ஆதரவுக்கு நன்றி!” – மமிதா பைஜு

சூர்யா நடிப்பில் இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்படத்தின் வெற்றி விழா சிறப்பாக நடைபெற்றது.

படத்திற்கு கிடைத்துள்ள அமோக வரவேற்பை தொடர்ந்து நடைபெற்ற Success Meet நிகழ்ச்சியில் படக்குழுவினர் கலந்து கொண்டு தங்களது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய மமிதா பைஜு, 

முதலில், இந்தப் படத்தில் பணியாற்றிய அனைத்து நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

குறிப்பாக ராதிகா மேம், ஜி.வி. பிரகாஷ் சார், இயக்குநர் வெங்கி அட்லூரி சார், சுனில் சார், சூர்யா சார் மற்றும் தயாரிப்பு நிறுவனம், விநியோகஸ்தர்கள் தரப்பில் பணியாற்றிய அனைவருக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தப் படம் இந்த அளவுக்கு வந்து, இன்னும் சிறப்பாக பயணிக்க நீங்கள் ஒவ்வொருவரும் அளித்த பங்களிப்பு மிகவும் முக்கியமானது. இதற்காக உங்கள் அனைவருக்கும் தனித்தனியாக எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

அதேபோல் பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கும் மிகப்பெரிய நன்றி. நீங்கள் ஏற்கனவே படத்தை பார்த்து, எங்களுக்கு சிறப்பான விமர்சனங்களையும் பாராட்டுகளையும் வழங்கியுள்ளீர்கள். தொடர்ந்து எங்களுக்கு மிகப்பெரிய ஆதரவையும் கொடுத்து வருகிறீர்கள்.

இனியும் இன்னும் அதிகமான மக்கள் இந்தப் படத்தை திரையரங்குகளில் பார்த்து, எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு அளிப்பார்கள் என்று நம்புகிறேன்.