அரேபியாவில் சாதித்த தமிழர்களுக்கு சிறப்பு அங்கீகாரம் – “Top 100 Tamil Leaders” வெளியீடு!

உலகின் பல்வேறு நாடுகளில் தமிழர்கள் தங்களது உழைப்பு மற்றும் திறமையின் மூலம் சாதனைகளைப் படைத்து வருகின்றனர். அந்த வகையில், அரேபிய நாடுகளில் தொழில், வணிகம் மற்றும் தலைமைத்துவத் துறைகளில் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்ற தமிழர்களின் பயணத்தை ஆவணப்படுத்தும் “Top 100 Tamil Leaders in Arabia – Edition 1” என்ற சிறப்பு நூல் துபாயில் நடைபெற்ற Sikaram 2026 நிகழ்வில் பிரம்மாண்டமாக வெளியிடப்பட்டது.

லால்குடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு லீமா ரோஸ் அவர்கள் இந்நூலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார். WIT அமைப்பின் ஏற்பாட்டாளர் Merlin முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நூலின் முதல் பிரதியை Vijayan Ayyappan, MLA லீமா ரோஸ் அவர்களிடம் வழங்கினார்.

அரேபிய நாடுகளில் தங்களது கடின உழைப்பு, விடாமுயற்சி மற்றும் தலைமைத்துவத் திறன் மூலம் வெற்றியை உருவாக்கிய தமிழர்களை கௌரவிக்கும் நோக்கில் இந்த நூல் உருவாக்கப்பட்டுள்ளது. சாதனையாளர்களின் பெயர்களை தொகுத்து வழங்குவதோடு மட்டுமின்றி, அவர்களின் வாழ்க்கைப் பயணங்களையும் வெற்றிக்கான முயற்சிகளையும் அடுத்த தலைமுறையினருக்கு ஊக்கமளிக்கும் வகையில் பதிவு செய்திருப்பது இந்நூலின் முக்கிய சிறப்பாகும்.

இந்நூலின் முதல் பிரதிகள் PSM Investment Group Chairman Habibullah, TVS Group-ன் Mr. Haider, Complyance நிறுவனத்தின் Kalaiarasan, Power Group Chairman Jahir Hussain மற்றும் Lynx International-ன் Saravan Krishnamurthy உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களுக்கு வழங்கப்பட்டன.

இந்த முயற்சி குறித்து WIT அமைப்பின் ஏற்பாட்டாளர் Merlin கூறுகையில்,

“இது வெறும் 100 தலைவர்களை அறிமுகப்படுத்தும் முயற்சி அல்ல. அரேபிய மண்ணில் தமிழர்கள் எழுதியுள்ள வெற்றிக் கதைகளை உலகிற்கு கொண்டு செல்லும் ஒரு வரலாற்றுப் பதிவு. இன்று சாதித்தவர்களை கௌரவிப்பதோடு, நாளை சாதிக்கப் போகும் இளைஞர்களுக்கு அவர்களின் பயணம் ஒரு நம்பிக்கையாகவும் உத்வேகமாகவும் அமைய வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்,” என்றார்.

“100 Leaders. 100 Journeys. One Tamil Legacy.” என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்தத் திட்டம், அரேபிய நாடுகளில் வசிக்கும் தமிழ்த் தொழிலதிபர்கள் மற்றும் தலைவர்களை ஒருங்கிணைக்கும் வலுவான Business & Leadership Networking Platform ஆகவும் வளரத் திட்டமிடப்பட்டுள்ளது.

‘Top 100 Tamil Leaders in Arabia’ என்பது சாதனையாளர்களின் தொகுப்பாக மட்டுமல்லாமல், உலகின் பல்வேறு பகுதிகளில் தமிழர்கள் உருவாக்கி வரும் வெற்றியின் அடையாளமாகவும் பார்க்கப்படுகிறது. முதல் பதிப்பாக வெளியாகியுள்ள இந்நூல், அரேபிய நாடுகளில் சாதனை படைத்த மேலும் பல தமிழர்களின் பயணங்களை எதிர்கால பதிப்புகள் மூலம் உலகிற்கு அறிமுகப்படுத்தும் முயற்சிக்கு தொடக்கமாக அமைந்துள்ளது.