ராகிங் ஸ்டார் யாஷ் நடிப்பில் உருவாகி வரும் இந்த ஆண்டின் மிகப்பெரிய திரை அனுபவங்களில் ஒன்றான ‘Toxic: A Fairy Tale for Grown-Ups’ திரைப்படம், 2026 ஆகஸ்ட் 26-ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்புடன் வெளியிடப்பட்டுள்ள புதிய போஸ்டர், யாஷ் ஏற்றுள்ள ராயா (Raya) மற்றும் டிக்கெட் (Ticket) எனும் இரட்டை அவதாரங்களை மையப்படுத்தி, படத்தின் மர்மம் நிறைந்த இருண்ட உலகத்தை ரசிகர்களுக்கு மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ளது. வழக்கமான தந்தை-மகன் உறவை சித்தரிக்கும் போஸ்டராக இல்லாமல், அதிகாரம், பதற்றம் மற்றும் உணர்ச்சிப் போராட்டங்களால் நிரம்பிய உறவின் சிக்கலான பரிமாணங்களை இந்த போஸ்டர் வெளிப்படுத்துகிறது.
இந்த புதிய போஸ்டர் வெறும் வெளியீட்டு தேதி அறிவிப்பாக இல்லாமல், முரண்பட்ட உணர்வுகள், மறைந்திருக்கும் ரகசியங்கள் மற்றும் ‘டாக்ஸிக்’ திரைப்படத்தின் பிரம்மாண்டமான கதையுலகிற்கான ஒரு வலுவான முன்னோட்டமாக அமைந்துள்ளது. இதனால் ஏற்கனவே உச்சத்தில் இருக்கும் ரசிகர்களின் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.
2026-ஆம் ஆண்டின் முக்கிய பண்டிகை காலத்தை குறிவைத்து இப்படம் வெளியாகிறது. வரமகாலட்சுமி விரதம், ஓணம், ஈத் மற்றும் ரக்ஷா பந்தன் உள்ளிட்ட பண்டிகைகளை உள்ளடக்கிய நீண்ட விடுமுறை காலத்தில் வெளியீடு திட்டமிடப்பட்டுள்ளதால், இந்தியா மட்டுமின்றி சர்வதேச சந்தைகளிலும் திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதன்கிழமை வெளியீடு என்பதால், நீண்ட விடுமுறை வாரத்தின் முழு பலனையும் பயன்படுத்தி அனைத்து தரப்பு ரசிகர்களையும் சென்றடையும் வகையில் வெளியீட்டு திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. பல்வேறு மொழிகள், கலாச்சாரங்கள் மற்றும் பிராந்தியங்களைச் சேர்ந்த பார்வையாளர்களை கவரும் வலிமை இந்த திரைப்படத்திற்கு இருப்பதாக திரையுலக வட்டாரங்கள் கருதுகின்றன.
தேசிய மற்றும் சர்வதேச அளவில் பாராட்டப்பட்ட இயக்குநர் கீது மோகன்தாஸ் மற்றும் ராகிங் ஸ்டார் யாஷ் ஆகியோரின் முதல் கூட்டணியாக உருவாகும் இந்த திரைப்படம், இந்திய சினிமாவின் மிகவும் பிரம்மாண்டமான முயற்சிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. KVN Productions மற்றும் Monster Mind Creations நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படம், கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டுள்ளதுடன், கன்னடம், தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.
மேலும், நயன்தாரா, கியாரா அத்வானி, ஹூமா குரேஷி, ருக்மிணி வசந்த் மற்றும் தாரா சுதாரியா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருப்பதும் படத்தின் எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ளது.
இதுவரை வெளியிடப்பட்ட ஒவ்வொரு அப்டேட்டும் ‘டாக்ஸிக்’ திரைப்படம் தனித்துவமான படைப்பாற்றல், உலகத் தரமான தயாரிப்பு மதிப்பு மற்றும் பிரம்மாண்டமான காட்சியமைப்புடன் உருவாகி வருவதை உறுதிப்படுத்தியுள்ளது. வெளியீட்டு கவுண்ட்டவுன் தொடங்கியுள்ள நிலையில், தற்போது ரசிகர்கள் மற்றும் திரையுலகின் முழு கவனமும் ‘டாக்ஸிக்’ திரைப்படத்தின் மீதும் அதன் உலகளாவிய வெளியீட்டு திட்டத்தின் மீதும் திரும்பியுள்ளது.
KVN Productions மற்றும் Monster Mind Creations தயாரிப்பில் உருவாகியுள்ள ‘Toxic: A Fairy Tale for Grown-Ups’ திரைப்படம், 2026 ஆகஸ்ட் 26-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.





