2019-ம் ஆண்டு வெளியான ‘Avengers: Endgame’ திரைப்படம் உலகம் முழுவதும் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. அரங்குகள் நிரம்பிய காட்சிகள், நள்ளிரவு சிறப்புக் காட்சிகள், சூப்பர் ஹீரோக்கள் போல வேடமணிந்து வந்த ரசிகர்கள் என ‘Endgame’ வெளியீடு ஒரு திரைப்படத்தைத் தாண்டிய கொண்டாட்டமாகவே மாறியது.
இந்நிலையில், சுமார் ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு ‘Avengers: Endgame – Encore’ என்ற பெயரில் இப்படம் மீண்டும் திரையரங்குகளில் வெளியாகிறது. இதன் மூலம் MCU-வின் முக்கியமான சினிமா நிகழ்வுகளில் ஒன்றை ரசிகர்கள் மீண்டும் பெரிய திரையில் அனுபவிக்க உள்ளனர்.
மேலும், ‘Avengers: Doomsday’ திரைப்படம் வெளியாகவுள்ள சூழலில், MCU-வின் அடுத்த கட்டப் பயணத்திற்கு முன்பாக ‘Endgame’ படத்தை மீண்டும் திரையரங்கில் பார்ப்பதற்கான சில முக்கிய காரணங்கள்:
1. மார்வெலின் மிகப்பெரிய சினிமா நிகழ்வை மீண்டும் ஒருமுறை அனுபவியுங்கள்:
22 திரைப்படங்களின் மூலம் உருவாக்கப்பட்ட ஹீரோக்களையும் கதைக்களங்களையும் அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் ஒன்றிணைத்தது. வேறு எந்த திரைப்படத்துடனும் ஒப்பிட முடியாத அளவிலான ஒரு பிரம்மாண்டமான சினிமா நிகழ்வாக அது அமைந்தது. அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்: என்கோர் மூலம் அந்த அனுபவத்தை மீண்டும் பார்ப்பது, அதன் முழு பிரம்மாண்டத்தையும் பெரிய திரையில் அனுபவிக்கும் வாய்ப்பாக அமையும்.
2. கேப்டன் அமெரிக்காவின் பிரபலமான தருணத்தை மீண்டும் பாருங்கள்:
சினிமா வரலாற்றில் இடம்பெறும் சில தருணங்கள் பாப் கலாச்சாரத்தின் ஓர் அங்கமாகிவிடுகின்றன. தானோஸுக்கு எதிரான கேப்டன் அமெரிக்காவின் போராட்டமும், அவெஞ்சர்ஸ் ஒன்றுகூடிய தருணமும் எண்ட்கேன் திரைப்படத்தின் மிகவும் கொண்டாடப்பட்ட காட்சிகளில் ஒன்றாகும். இது ரசிகர்களின் மனதில் நீங்கா நினைவுகளை உருவாக்கியது.
3. பிளாக் விடோவுக்கு அஞ்சலி செலுத்துங்கள்:
நடாஷா ரோமானாஃப்பின் தியாகம், திரைப்படத்தின் மிகவும் உணர்ச்சிகரமான தருணங்களில் ஒன்றாக இன்றும் உள்ளது. பல ஆண்டுகளாக அவெஞ்சர்ஸுடன் இணைந்து போராடிய பிளாக் விடோ, அனைவரையும் மீண்டும் உயிர்ப்பிக்க உதவுவதற்காக தனது உயிரையே தியாகம் செய்தார். இது அவரது கதாபாத்திரத்திற்கு வலிமையான மற்றும் மறக்க முடியாத விடைபெறலாக அமைந்தது. அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்: என்கோர் திரைப்படத்தை பார்ப்பது, MCU-வின் மிகவும் நேசிக்கப்பட்ட ஹீரோக்களில் ஒருவரான பிளாக் விடோவுக்கு ரசிகர்கள் தங்கள் அஞ்சலியை செலுத்தும் ஒரு வாய்ப்பாகும்.
4. புதிய மார்வெல் அத்தியாயத்திற்கு முன் அயர்ன் மேனை இன்னொரு முறை பாருங்கள்:
ரசிகர்களைப் பொறுத்தவரை, அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் என்பது ராபர்ட் டவுனி ஜூனியர் நடித்த டோனி ஸ்டார்க்கிற்கு கிடைத்த உணர்ச்சிகரமான விடைபெறலாகும். அயர்ன் மேனாக அவரது இறுதித் தருணங்கள் மார்வெல் வரலாற்றின் முக்கியமான பகுதியாக மாறின. இப்போது RDJ மீண்டும் MCU-வுக்கு டாக்டர் டூமாக வருவதால், எண்ட்கேம் மீண்டும் பார்ப்பது பழைய நினைவுகளை மீட்டெடுக்கும். அயர்ன் மேனாக அவரது கடைசி தருணங்களை மீண்டும் பார்த்துவிட்டு, முற்றிலும் புதிய அத்தியாயத்துக்குள் அடியெடுத்து வைக்கும் வாய்ப்பு இது.
5. அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டேவின் பிரத்யேக முன்னோட்டம்:
மீண்டும் திரையரங்குக்குச் செல்வதற்கான முக்கிய காரணம், அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்: என்கோர், அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டேவுக்கு களமமைத்து, அவெஞ்சர்ஸ் சாகாவின் அடுத்த அத்தியாயத்தைப் பற்றிய பிரத்யேக முன்னோட்டத்தை பார்வையாளர்களுக்கு வழங்குகிறது. மார்வெல் பிரபஞ்சத்தின் வெவ்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஹீரோக்களை ஒன்றிணைக்க உள்ள நிலையில், இந்த என்கோர் வெறும் பழைய நினைவுகளை மீட்டெடுப்பதாக மட்டும் இல்லாமல், கதை அடுத்து எங்கு செல்கிறது என்பதற்கான எடுத்து சொல்லும்.





