கார்த்திக் சுப்புராஜின் “டோரதி”க்கு குவியும் பாராட்டு – திரையரங்குகளில் அதிகரிக்கும் கூட்டம்!

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் பத்தாவது படைப்பாக உருவாகியுள்ள ‘டோரதி’ திரைப்படம், வித்தியாசமான கதைக்களம், இயல்பான நடிப்பு மற்றும் இளையராஜாவின் இசை என பல அம்சங்களால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. அடையாளம், நட்பு, ஏற்றுக்கொள்ளுதல் மற்றும் மனித உறவுகளை மையமாகக் கொண்டு, வழக்கமான அணுகுமுறையிலிருந்து மாறுபட்ட வகையில் இப்படம் உருவாகியுள்ளது.