விஷால் வெங்கட் இயக்கத்தில் ரெஜினா கசாண்ட்ரா, நாசர் கூட்டணி – படப்பிடிப்பு நிறைவு!

தமிழ் திரையுலகில் வித்தியாசமான கதைக்களங்களைக் கொண்ட திரைப்படங்களைத் தயாரித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம், தற்போது ஜி ஸ்குவாட் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பை முழுமையாக நிறைவு செய்துள்ளது. இதனை அறிவிக்கும் வகையில் படப்பிடிப்பு நிறைவு வீடியோவைப் படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு வீடியோ திரைப்படம் குறித்த எதிர்பார்ப்பை ரசிகர்கள் மற்றும் திரைத்துறை வட்டாரங்களில் அதிகரித்துள்ளது.

இப்படத்தை இயக்குநர் விஷால் வெங்கட் இயக்கியுள்ளார். அர்ஜுன் தாஸ் நடிப்பில் வெளியான ‘பாம்’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான இவர், தொடர்ந்து விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பாராட்டுகளைப் பெற்ற ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ திரைப்படத்தையும், ‘ஒரு கோடை மர்டர் மிஸ்டரி’ இணையத் தொடரையும் இயக்கியுள்ளார்.

புதிய படம் குறித்து இயக்குநர் விஷால் வெங்கட் கூறுகையில், “மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் இந்தியாவின் சிறந்த இயக்குநர்களில் ஒருவரான லோகேஷ் கனகராஜ் ஆகியோருடன் பணியாற்றியது எனக்குப் பெருமையான அனுபவம். ரெஜினா கசாண்ட்ராவுடன் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சியாக இருந்தது. அவரது அர்ப்பணிப்பு எனக்கு முழுப் படப்பிடிப்பிலும் ஊக்கமளித்தது. நாசர் தனது கதாபாத்திரத்திற்கு உயிரூட்டியுள்ளார். ரமேஷ் திலக், ஸ்ரீஜா ரவி மற்றும் மற்ற கலைஞர்கள் அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர். படத்தைப் பற்றிய அடுத்தடுத்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும்” என்றார்.

ஜி ஸ்குவாட் நிறுவனத்தின் தயாரிப்பாளரும் இயக்குநருமான லோகேஷ் கனகராஜ் பகிர்ந்து கொண்டதாவது, “விஷால் வெங்கட் மிகச்சிறந்த இயக்குநர். அவரது ஐடியா எப்போதும் எனக்கு இன்ஸ்பிரேஷன். கதை விவாதம் தொடங்கி தயாரிப்பு மற்றும் தற்போது இறுதிக்கட்டப் பணிகள் வரை அவருடன் இணைந்து பணியாற்றிய ஒவ்வொரு தருணத்தையும் ரசித்தேன். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சியான அனுபவம். நாங்கள் அனைவரும் இணைந்து ரசிகர்களுக்கு முழுமையான திரையரங்க அனுபவத்தை வழங்க ஆவலுடன் காத்திருக்கிறோம்” என்றார்.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர்களான நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர் பகிர்ணந்து கொண்டதாவது, “தமிழ் சினிமாவில் எங்களது பயணம் மிகச் சிறப்பானதாக அமைந்துள்ளது. ஒவ்வொரு திரைப்படமும் இந்தத் துறையின் நம்பிக்கைக்குரிய திறமையாளர்களுடன் இணைந்து பணியாற்றுவதற்கான புதிய வாய்ப்பை வழங்குகிறது.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவிசங்கர் தெரிவித்ததாவது, “தமிழ் திரையுலகில் எங்களது பயணம் மகிழ்ச்சிகரமாக அமைந்துள்ளது. ஒவ்வொரு திரைப்படமும் இத்துறையில் திறமையுடன் செயல்படும் புதிய கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றுவதற்கான வாய்ப்பை வழங்குகிறது.

முன்தயாரிப்புப் பணிகளின்போது திட்டமிட்டபடி, இயக்குநர் விஷால் வெங்கட் குறிப்பிட்ட காலத்திற்குள் படப்பிடிப்பை நிறைவு செய்திருப்பது எங்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது. இப்படம் தொடர்பான கூடுதல் விவரங்களை விரைவில் வெளியிடவுள்ளோம். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்புப் பயணத்தில் இந்தப் படமும் குறிப்பிடத்தக்க படைப்பாக அமையும் என்ற நம்பிக்கை உள்ளது” என்றனர்.