நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் வெங்கி அட்லூரி கூட்டணியில் உருவாகியுள்ள “விஸ்வநாத் & சன்ஸ்” திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியாக உள்ளது. குடும்ப உணர்வுகள், நகைச்சுவை மற்றும் மனதை வருடும் தருணங்கள் நிறைந்த முழுமையான ஃபேமிலி என்டர்டெய்னராக இப்படம் உருவாகியுள்ளது.
பிளாக்பஸ்டர் இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கியுள்ள இந்த திரைப்படத்தை சூர்யதேவர நாக வம்ஷீ மற்றும் சாயி சௌஜன்யா தயாரித்துள்ளனர். டீசர் மற்றும் டைட்டில் அறிவிப்பு வெளியான தருணத்திலிருந்தே ரசிகர்கள் மத்தியில் படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
குறிப்பாக, ஒரு குழந்தையுடன் சூர்யா இடம்பெற்றிருந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி, நடிகரின் பழைய வசீகரமான நடிப்பு பாணியை ரசிகர்களுக்கு மீண்டும் நினைவூட்டியது. இதனால் குடும்ப ரசிகர்களிடையே இப்படத்திற்கான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.
‘வாத்தி’, ‘லக்கி பாஸ்கர்’ போன்ற வெற்றி படங்களை தொடர்ந்து இயக்குநர் வெங்கி அட்லூரி, இந்த படத்தின் மூலம் குடும்ப உறவுகள், உணர்ச்சி மிக்க கதை சொல்லல் மற்றும் மனதை கவரும் தருணங்களுடன் ஒரு ஃபீல் குட் எண்டர்டெய்னரை வழங்க உள்ளார்.
இப்படத்தில் மமிதா பைஜு, ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இப்படத்திற்கு நிமிஷ் ரவி ஒளிப்பதிவு செய்துள்ளார். நவீன் நூலி படத்தொகுப்பு பணிகளை கவனித்துள்ள நிலையில், பங்களன் தயாரிப்பு வடிவமைப்பாளராக பணியாற்றியுள்ளார்.
இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் குடும்ப பொழுதுபோக்கு திரைப்படங்களில் ஒன்றாக “விஸ்வநாத் & சன்ஸ்” உருவாகியுள்ளது. தமிழ்நாட்டில் இப்படத்தை திங்க் ஸ்டூடியோஸ் நிறுவனம் வெளியிடுகிறது. இதன் மூலம் மாநிலம் முழுவதும் படத்திற்கு வலுவான திரையரங்கு வெளியீடு கிடைக்க உள்ளது.
குடும்பத்துடன் கொண்டாடக்கூடிய உணர்ச்சிப்பூர்வமான பொழுதுபோக்கு படமாக உருவாகியுள்ள “விஸ்வநாத் & சன்ஸ்” திரைப்படத்தை ரசிகர்கள் வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி திரையரங்குகளில் காணலாம்.





