“ரஞ்சன்” செட்டில் உற்சாகம்… ரவியாதவ் பிறந்தநாள் கொண்டாட்டம் வைரல்!

பிரபல கேமராமேனும் தயாரிப்பாளருமான ரவியாதவ் பிறந்த நாளை “ரஞ்சன்” படக்குழு கேக் வெட்டி கொண்டாடியது.

இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் நடிகரான தியாகராஜன் இயக்கத்தில், டாப் ஸ்டார் பிரஷாந்த் நடிப்பில் உருவாகி வரும் “ரஞ்சன்” திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த படத்தில் சத்யராஜ், தேவயானி, ஆர்.கே.சுரேஷ், மோகன்ராம், ஆதிரா, மானஸ்வி, ஆதேஷ்பாலா, சந்தோஷ் பிரபாகர், மோகன்லால் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மேலும், பிரபல தயாரிப்பாளர் கதிரேசனின் மகன் ஹரியும், நடிகை தேவயானியின் மகள் பிரியங்காவும் இளம் ஜோடியாக இந்த படத்தின் மூலம் அறிமுகமாகிறார்கள்.

இளைஞர்களுக்கு போக்சோ சட்டத்தின் முக்கியத்துவத்தையும் அதன் தாக்கத்தையும் எடுத்துரைக்கும் விதமாக உருவாகி வரும் இந்த படத்தில், நீதிமன்றக் காட்சிகள் தீவிரமாக படமாக்கப்பட்டு வரும் நிலையில், கேமராமேன் ரவியாதவின் பிறந்த நாள் படப்பிடிப்பு தளத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

திடீரென படப்பிடிப்பு தளத்திற்கு பெரிய கேக் வரவழைக்கப்பட்டு, நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் முன்னிலையில் ரவியாதவ் கேக் வெட்டி மகிழ்ச்சியாக பிறந்த நாளை கொண்டாடினார்.

சமூகத்திற்கு முக்கியமான கருத்தை பேசும் “ரஞ்சன்” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.