நடிகர் திலீப்–காவ்யா மாதவனின் ‘தி புட்டு’ அண்ணா நகரில் புதிய கிளை

கேரளாவின் பாரம்பரிய உணவுகளையும், மண்ணின் மணம் மாறாத தனித்துவமான சுவைகளையும் உணவு பிரியர்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் செயல்பட்டு வரும் ‘தி புட்டு – Dhe Puttu’ உணவகத்தின் புதிய கிளை சென்னை அண்ணா நகரில் தொடங்கப்பட்டுள்ளது.

நடிகர் திலீப் மற்றும் நடிகை காவ்யா மாதவன் ஆகியோருக்குச் சொந்தமான இந்த உணவகம், கேரளத்தின் புகழ்பெற்ற பாரம்பரிய உணவு வகைகளை நவீன உணவகச் சூழலில் வழங்கி வருகிறது. சென்னை வாழ் மலையாளிகள் மட்டுமின்றி, கேரள உணவுகளின் சுவையை விரும்பும் அனைத்து உணவு பிரியர்களையும் கவரும் வகையில் அண்ணா நகரில் புதிய கிளை அமைக்கப்பட்டுள்ளது.

புதிய கிளையின் திறப்பு விழா இன்று விமரிசையாக நடைபெற்றது. தயாரிப்பாளர் கோகுலம் கோபாலன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உணவகத்தை திறந்து வைத்தார்.

விழாவில் நடிகர்கள் அசோகன், ஷாந்தனு பாக்யராஜ், அர்ஜுன் அசோகன், ரியாஸ் கான் உள்ளிட்டோரும், நடிகைகள் மீனா, ஷாரதா, ஷீலா, சீமா, ராதிகா சரத்குமார், மிர்னா, பூர்ணிமா பாக்யராஜ், கிகி விஜய் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

மேலும், சட்டமன்ற உறுப்பினர் லீமா ரோஸ் மார்டின், இயக்குநர் பிரியதர்ஷன், தயாரிப்பாளர்கள் கண்ணன் ரவி, சிவா, விஜயகுமார், ரவி கொட்டாரக்கரா, Seven Arts விஜயகுமார், Prince Pictures வெங்கடேஷ், ஏ.வி. அனூப், மினி ஸ்டூடியோ வினோத் குமார், பாடகர்கள் ராகேஷ் பிரம்மானந்தன், சுஜாதா மோகன், நடன இயக்குநர்கள் கலா மாஸ்டர், சாண்டி மாஸ்டர், ஸ்டண்ட் மாஸ்டர்கள் கனல் கண்ணன், மாஃபியா சசி, ஒளிப்பதிவாளர் அபினந்தன் ராமானுஞ்சன், டாக்டர் சைதன்யா, டாக்டர் கே. கிரீஷ் உள்ளிட்ட பல்வேறு திரையுலகப் பிரபலங்களும் நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்பித்தனர்.

‘தி புட்டு’ உணவகத்தின் முக்கிய சிறப்பம்சமாக 80-க்கும் மேற்பட்ட வகைகளில் புட்டு வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. பாரம்பரிய புட்டுடன் பல்வேறு சுவை மற்றும் வகைகளில் தயாரிக்கப்படும் புட்டுகள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகின்றன.

இந்தியாவைத் தாண்டியும் பல்வேறு நாடுகளில் கிளைகளைக் கொண்டுள்ள ‘தி புட்டு’ நிறுவனம், துபாய், சார்ஜா, ஜெட்டா, தோஹா உள்ளிட்ட வளைகுடா நகரங்களிலும் தனது உணவகங்களை நடத்தி வருகிறது.

அண்ணா நகரில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள கிளையின் உட்புற வடிவமைப்பும் கேரளத்தின் பாரம்பரிய கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. கேரளத்தின் கட்டிடக்கலை மற்றும் பண்பாட்டு அம்சங்களை நினைவூட்டும் வகையில் அமைக்கப்பட்டுள்ள உணவகச் சூழல், வாடிக்கையாளர்களுக்கு தனித்துவமான அனுபவத்தை வழங்கும் வகையில் அமைந்துள்ளது.

80 வகையான புட்டுகளுடன், கேரளாவின் பல்வேறு பாரம்பரிய உணவு வகைகளும் இங்கு இடம்பெற்றுள்ளதால், கேரள உணவுகளின் மீது ஆர்வம் கொண்ட உணவு பிரியர்களிடையே இந்த புதிய கிளை கவனம் பெற்றுள்ளது.