நடிகர் கார்த்தி முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘சர்தார் 2’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டீசர் வெளியாகி, ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வருகிறது. இயக்குநர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த திரைப்படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ். லக்ஷ்மண் குமார் மற்றும் விவிஒய் நிறுவனம் சார்பில் இஷான் சக்சேனா இணைந்து தயாரித்துள்ளனர்.
முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து உருவாகியுள்ள இந்த இரண்டாம் பாகத்தின் டீசர், அதிரடியான காட்சிகள், சர்வதேச தரத்தில் வடிவமைக்கப்பட்ட ஆக்ஷன் சீக்வென்ஸ்கள் மற்றும் கார்த்தியின் வித்தியாசமான தோற்றங்கள் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதன் மூலம் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் மேலும் உயர்ந்துள்ளது.
பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி வரும் இந்த திரைப்படத்திற்கு சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவை ஜார்ஜ் சி. வில்லியம்ஸ் மேற்கொண்டுள்ள நிலையில், சண்டைக் காட்சிகளை திலீப் சுப்பராயன் வடிவமைத்துள்ளார். கலை இயக்கத்தை ராஜீவன் நம்பியார், படத்தொகுப்பை வேலுக்குட்டி கவனித்துள்ளனர்.
தயாரிப்பு நிர்வாகியாக ஏ. பால் பாண்டி பணியாற்றியுள்ள இந்தப் படத்தின் இணைத் தயாரிப்பாளராக ஏ. வெங்கடேஷ் செயல்பட்டுள்ளார்.
டீசர் வெளியான உடனேயே சமூக வலைதளங்களில் வைரலாகி, ரசிகர்களிடையே டிரெண்டாகி வருகிறது. விரைவில் படத்தின் பாடல்கள் மற்றும் அதிகாரப்பூர்வ டிரெய்லர் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.
பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் ‘சர்தார் 2’ திரைப்படம் செப்டம்பர் 10 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.





