சக்தி ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனத்தின் நிறுவனர் சக்திவேலனின் பிறந்தநாள் விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. திரையுலகைச் சேர்ந்த ஏராளமான பிரபலங்கள் பங்கேற்று அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
சக்திவேலனின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற இந்த சிறப்பு நிகழ்வில், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர். தங்களது வாழ்த்துகளை நேரில் தெரிவித்து, பிறந்தநாள் விழாவை மேலும் சிறப்பித்தனர்.
நடிகர்கள் சூர்யா, கார்த்தி, விக்ரம் பிரபு, கவுதம் கார்த்திக், பார்த்திபன், சுந்தர்.சி, மாதம்பட்டி ரங்கராஜ், சாந்தனு, குணாநிதி, ஏகன், சுனில் ரெட்டி உள்ளிட்டோர் விழாவில் கலந்து கொண்டனர்.
இயக்குநர்கள் பசங்க பாண்டியராஜ், ஆதிக் ரவிச்சந்திரன், வெங்கட் பிரபு, கார்த்திக் சுப்பராஜ், ராம், உறியடி விஜயகுமார், தியாகராஜன் குமாரராஜா உள்ளிட்ட முன்னணி படைப்பாளிகளும் நிகழ்வில் பங்கேற்று சக்திவேலனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
நடிகைகள் சாக்க்ஷி அகர்வால் மற்றும் அதுல்யா ரவி ஆகியோரும் விழாவில் கலந்துகொண்டு தங்களது வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.
இதனுடன் தயாரிப்பாளர்கள் ஏ.எம். ரத்னம், ஞானவேல் ராஜா, ராஜசேகர்பாண்டியன், கண்ணன் ரவி, அம்மா கிரியேஷன்ஸ் சிவா, தனஜெயன், அருண் விஷ்வா, அருளானந்து, அருண்குமார் உள்ளிட்ட பல திரையுலகப் பிரபலங்களும் விழாவில் கலந்து கொண்டனர்.
தமிழ் திரையுலகின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த முன்னணி பிரபலங்கள் ஒரே இடத்தில் ஒன்றுகூடி சக்திவேலனுக்கு வாழ்த்து தெரிவித்ததால், அவரது பிறந்தநாள் விழா உற்சாகமும் மகிழ்ச்சியும் நிறைந்த சிறப்பான கொண்டாட்டமாக அமைந்தது.





