“இருமுடி கட்டு” திரை விமர்சனம்

“இருமுடி கட்டு” சிவா நிர்வாணா இயக்கத்தில் நவீன் யெர்నేனி, ஒய். ரவி சங்கர் தயாரிப்பில் உருவாகியிருக்கும். இந்த படத்திற்கு இசை ஜி.வி. பிரகாஷ் குமார். இந்த படத்தில் ரவி தேஜா, பிரியா பவானி சங்கர், பேபி நக்ஷத்ரா, சாய் குமார், அஜய் கோஷ், ஸ்வஸிகா விஜய் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

ரவி தேஜா என்ற கதாபாத்திரத்தில், மனைவி பிரியா பவானி சங்கர் மற்றும் மகள் பேபி நக்ஷத்திராவுடன் வாழ்ந்து வருகிறார். மகள் மீது அளவற்ற பாசம் கொண்டிருந்தாலும், மதுப்பழக்கத்தால் குடும்பத்தில் பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன. ஒரு கட்டத்தில் மகளின் வேண்டுகோளுக்காக மதுவைத் துறந்து ஐயப்ப மாலை அணிந்து, இருமுடி கட்டி சபரிமலை செல்ல முடிவு செய்கிறார் திரிநாத். அதன்பிறகு அவரது வாழ்க்கையில் எதிர்பாராத சம்பவங்கள் நடக்கத் தொடங்குகின்றன. அவரது குடும்பத்தையும், குறிப்பாக மகளையும் சுற்றி உருவாகும் பிரச்சனைகள், ஊரில் நடக்கும் மர்மமான சம்பவங்கள் அவரது தனிப்பட்ட வாழ்க்கையையும், குடும்பத்தையும் எவ்வாறு மாற்றுகிறது என்பதுதான் “இருமுடிக்கட்டு” படத்தின் கதை.

ரவி தேஜாவின் வழக்கமான மாஸ் கதாபாத்திரங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட வகையில், மகள் மீது பாசம் கொண்ட தந்தையாக அவர் நடித்திருப்பது படத்தின் மிகப்பெரிய பலம். குறிப்பாக மகளுடன் வரும் காட்சிகளில் அவரது நடிப்பு இயல்பாகவும் உணர்வுப்பூர்வமாகவும் இருக்கிறது.

பேபி நக்ஷத்திரா படத்தின் மிகப்பெரிய சர்ப்ரைஸ். ரவி தேஜாவின் மகளாக நடித்துள்ள பேபி நக்ஷத்திரா, தனது நடிப்பால் பல இடங்களில் கவனம் ஈர்க்கிறார். ரவி தேஜா–நக்ஷத்திரா இடையேயான தந்தை–மகள் உறவு படத்தின் உணர்வுப்பூர்வமான மையமாக அமைந்துள்ளது.

பிரியா பவானி சங்கரின் நடிப்பு, வெறும் கதாநாயகியாக அல்லாமல் குடும்ப உணர்வுகளை தாங்கி நிற்கும் மனைவி மற்றும் தாயின் இயல்பான வெளிப்பாடாக அமைந்துள்ளது. ரவி தேஜாவுடன் வரும் குடும்பக் காட்சிகளும், மகளுடன் வரும் பாசமான தருணங்களும் கதையின் உணர்ச்சி ஆழத்திற்கு முக்கிய பங்களிப்பை வழங்குகின்றன.

சாய் குமார், அஜய் கோஷ், ஸ்வஸிகா விஜய் உள்ளிட்டோரும் தங்களுக்கான கதாபாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர்.

ஜி.வி. பிரகாஷ் குமாரின் இசை படத்தின் பக்தி மற்றும் உணர்வுப்பூர்வமான காட்சிகளுக்கு வலு சேர்க்கிறது. குறிப்பாக ‘இருமுடி கட்டு’ பாடல் ஐயப்ப பக்தி மற்றும் ஆன்மிகப் பயணத்தை முன்னிறுத்துகிறது.

இயக்கம் சிவா நிர்வாணா, எளிமையான குடும்பக் கதைக்குள் பக்தி, பாசம், குற்றம், மனமாற்றம் ஆகியவற்றை இணைத்திருக்கிறார். பெண்களை பயத்துடன் அல்ல, தைரியத்துடன் வளர்க்க வேண்டும் என்ற கருத்தையும் படம் முன்வைக்கிறது.

ஆக்‌ஷன் மற்றும் பதற்றமான காட்சிகளில் வேகமான எடிட்டிங் பயன்படுத்தப்பட்டிருப்பது படத்திற்கு விறுவிறுப்பை சேர்க்கிறது. அதேநேரத்தில், சில இடங்களில் கதை நகர்வு சற்று மெதுவாகத் தோன்றுவதால், அந்தப் பகுதிகளை இன்னும் சுருக்கியிருந்தால் திரைக்கதையின் வேகம் மேம்பட்டிருக்கும்.

‘இருமுடி கட்டு’ ரவி தேஜாவின் வழக்கமான மாஸ் விருந்தல்ல; பாசம், பக்தி, மனமாற்றம் ஆகியவற்றை முன்னிறுத்தும் ஒரு உணர்வுப்பூர்வமான குடும்பப் படம். ரவி தேஜாவின் வித்தியாசமான நடிப்பு, பேபி நக்ஷத்திராவின் சிறப்பான பங்களிப்பு, ஜி.வி. பிரகாஷின் இசை ஆகியவை படத்தை தாங்கி நிற்கின்றன.

ஆக்‌ஷன் மற்றும் பதற்றமான காட்சிகளில் வேகமான எடிட்டிங் பயன்படுத்தப்பட்டிருப்பது படத்திற்கு விறுவிறுப்பை சேர்க்கிறது. அதேநேரத்தில், சில இடங்களில் கதை நகர்வு சற்று மெதுவாகத் தோன்றுவதால், அந்தப் பகுதிகளை இன்னும் சுருக்கியிருந்தால் திரைக்கதையின் வேகம் மேம்பட்டிருக்கும்.

மொத்தத்தில், ‘இருமுடி கட்டு’ என்பது ஒரு தந்தையின் மகள் மீதான பாசம், அந்தப் பாசத்தால் ஏற்படும் மனமாற்றம், ஐயப்ப பக்தி மற்றும் குடும்பத்தை காப்பாற்ற அவர் மேற்கொள்ளும் போராட்டம் ஆகியவற்றை இணைக்கும் கதை.

“இருமுடி கட்டு” படத்திற்கு மதிப்பீடு 3.5/5

குடும்பத்துடன் பார்க்கக்கூடிய உணர்வுப்பூர்வமான படம்