‘ஒரு வடக்கன் செல்பி’, ‘அச்சம் என்பது மடமையடா’, ‘FIR’, ‘களத்தில் சந்திப்போம்’, ‘தேவராட்டம்’, ‘சுழல் 2’ உள்ளிட்ட பல திரைப்படங்கள் மற்றும் தொடர்களில் நடித்து ரசிகர்களிடம் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் நடிகை மஞ்சிமா மோகன்.
திரையுலகில் அடுத்தடுத்த படைப்புகள் மூலம் மீண்டும் கவனம் ஈர்க்கும் வகையில், தற்போது தனது தோற்றத்தில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை கொண்டு வந்துள்ளார். உடல் எடையை கணிசமாகக் குறைத்து, ஃபிட்டான மற்றும் பொலிவான தோற்றத்திற்கு மாறியுள்ள அவரது புதிய லுக் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
மஞ்சிமா மோகன் தனது புதிய தோற்றத்தில் எடுத்துள்ள போட்டோஷூட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வருகின்றன. இதனைப் பார்த்த ரசிகர்கள் அவரது மேக்ஓவரை பாராட்டி பல்வேறு கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
வித்தியாசமான ஸ்டைலுடன் கூடிய இந்த புதிய தோற்றம், மஞ்சிமா மோகனின் அடுத்தடுத்த திரைப்படங்கள் குறித்த எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவர் புதிய லுக்கில் களமிறங்கியிருப்பதால், அவரது அடுத்த படைப்புகளில் எந்த மாதிரியான கதாபாத்திரங்களில் நடிக்கப் போகிறார் என்ற ஆர்வமும் ரசிகர்கள் மத்தியில் உருவாகியுள்ளது.
புதிய தோற்றத்துடன் திரையுலகில் மீண்டும் தனது பயணத்தை வேகப்படுத்தத் தயாராகி வரும் மஞ்சிமா மோகனின் இந்த மேக்ஓவர் தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.





