அகில இந்திய சூர்யா நற்பணி இயக்கம் சார்பில் நேற்று நடைபெற்ற Photoshoot நிகழ்வில், தமிழ்நாட்டின் 25 மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 2,000 ரசிகர்கள் பங்கேற்று நிகழ்வை சிறப்பித்தனர்.
நிகழ்வில் ரசிகர்களை சந்தித்த நடிகர் சூர்யா, ஒவ்வொருவரிடமும் தனிப்பட்ட முறையில் உரையாடி அவர்களின் நலன் குறித்து அக்கறையுடன் கேட்டறிந்தார். மேலும், ரசிகர்கள் அனைவரும் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளித்து, ஒழுக்கத்துடனும் பொறுப்புணர்வுடனும் செயல்பட வேண்டும் என அன்புடன் அறிவுறுத்தினார்.
ஒவ்வொரு ரசிகரையும் நேரில் சந்தித்து அவர்களுடன் அன்பாக பழகிய சூர்யாவின் எளிமையான அணுகுமுறை, அங்கு திரண்டிருந்த ரசிகர்களிடையே நெகிழ்ச்சியையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது. நடிகரின் இந்த அன்பான சந்திப்பு ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்தது.





