நான்கு நாட்களில் ரூ.50 கோடி வசூல்: “மீசைய முறுக்கு-2” புதிய சாதனை

செப்டம்பர் 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான “மீசைய முறுக்கு-2” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று, வசூலில் தொடர்ந்து முன்னேறி வருகிறது.

வெளியான நான்கு நாட்களிலேயே ரூ.50 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து படம் புதிய சாதனை படைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், படத்தின் இயக்குநர், கதாநாயகன் மற்றும் இசையமைப்பாளரான ஹிப்ஹாப் தமிழா ஆதியையும், தயாரிப்பாளர் சுந்தர்.சி-யையும் விநியோகஸ்தர் 5 ஸ்டார் செந்தில் நேரில் சந்தித்து மாலை அணிவித்து தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். படத்தின் வெற்றியை முன்னிட்டு நடைபெற்ற இந்த சந்திப்பு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.