நீதிக்கான புதிய போராட்டம்… “சட்டமும் நீதியும் 2” டிரெய்லர் வெளியானது!

முதல் சீசனுக்குக் கிடைத்த ரசிகர்களின் வரவேற்பைத் தொடர்ந்து, வழக்கறிஞர் சுந்தரமூர்த்தியாக சரவணன் மீண்டும் களமிறங்கும் ‘சட்டமும் நீதியும் 2’ தொடரின் டிரெய்லரை தமிழ் ZEE5 வெளியிட்டுள்ளது. இம்முறை வரலட்சுமி சரத்குமாரும் முக்கியக் கதாபாத்திரத்தில் இணைந்துள்ளதால், தொடரின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதிகாரம், செல்வாக்கு, மறைக்கப்படும் உண்மைகள் மற்றும் நீதிக்கான போராட்டம் ஆகியவற்றை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இத்தொடர், அக்டோபர் 23, 2026 முதல் தமிழ் ZEE5 தளத்தில் வெளியாகிறது.

இயக்குநர் பாலாஜி செல்வராஜ் இயக்கத்தில், 18 கிரியேட்டர்ஸ் சார்பில் சசிகலா பிரபாகரன் தயாரித்துள்ள இத்தொடர், நீதிமன்றப் பின்னணியில் விறுவிறுப்பான திரைக்கதையுடன் உருவாகியுள்ளது. முதல் சீசனில் அறிமுகமான வழக்கறிஞர் சுந்தரமூர்த்தி, இந்த முறை புதிய வழக்கையும் அதன் பின்னணியில் இருக்கும் பல்வேறு சிக்கல்களையும் எதிர்கொள்கிறார். சட்டத்தின் முன் உண்மையை நிலைநாட்டுவதற்கான முயற்சியில் அதிகாரமும் தனிப்பட்ட நலன்களும் குறுக்கிடும்போது ஏற்படும் மோதல்களே இந்தச் சீசனின் மையமாக அமைகின்றன.

தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளப் பிரிவுகளின் வணிகத் தலைவர் லாயிட் சி. சேவியர் கூறியதாவது:

“தமிழ் ZEE5-ல், எங்களுடைய ஒரிஜினல் படைப்புகளுக்காகத் துணிச்சலான முடிவுகளை எடுக்க நாங்கள் ஒருபோதும் தயங்குவதில்லை. ஏனெனில், வழக்கமான வெற்றிச் சூத்திரங்களை நாங்கள் நம்புவதில்லை. அர்த்தமுள்ள கதை சொல்லலின் வலிமையையும், அத்தகைய படைப்புகளை உறுதியுடன் ஆதரிப்பதையும் நம்புகிறோம். ஒரிஜினல் படைப்புகளுக்கான போட்டியில் பங்கேற்பது மட்டுமே எங்களுடைய நோக்கமல்ல; தரமான பிராந்திய ஒரிஜினல் படைப்புகள் எப்படி இருக்க வேண்டும் என்பதை வரையறுப்பதே எங்களுடைய இலக்கு.

‘சட்டமும் நீதியும்’ முதல் சீசனுக்குக் கிடைத்த பாராட்டுகள், சட்ட நடவடிக்கைகளைத் தாண்டி நீதி மற்றும் பொறுப்புக்கூறல் குறித்த ஆழமான கேள்விகளை ஆராயும் நீதிமன்றப் பின்னணியிலான கதைகளில் பார்வையாளர்களுக்கு இருக்கும் ஆர்வத்தை உறுதிப்படுத்தின. இந்தப் பண்டிகைக் காலத்தில், பல்வேறு வகைகளில் ஏராளமான புதிய படைப்புகளை வெளியிடத் திட்டமிட்டுள்ளோம். இதன் மூலம், பார்வையாளர்கள் ரசிப்பதற்குப் பல சுவாரஸ்யமான கதைகளையும் பொழுதுபோக்கு அனுபவங்களையும் வழங்கவிருக்கிறோம்.

‘சட்டமும் நீதியும் 2’ தனது முதல் சீசனின் வெற்றியைத் தொடர்ந்து, புதிய வழக்கு, அதிகரிக்கும் சவால்கள் மற்றும் சிக்கலான தார்மீகக் குழப்பங்களுடன் உருவாகியுள்ளது. சுந்தரமூர்த்தியாக சரவணன் மீண்டும் நடிப்பதுடன், வரலட்சுமி சரத்குமார் போன்ற திறமையான நடிகை இந்தத் தொடரில் இணைந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. அக்டோபர் 23 முதல் தமிழ் ZEE5-ல் மற்றுமொரு விறுவிறுப்பான, சிந்திக்கத் தூண்டும் கதையைப் பார்வையாளர்களிடம் கொண்டு சேர்ப்பதில் மகிழ்ச்சியடைகிறோம்.”

நடிகர் சரவணன் கூறியதாவது:

“‘சட்டமும் நீதியும்’ முதல் சீசனுக்குக் கிடைத்த அன்பும் பாராட்டுகளும் சுந்தரமூர்த்தி கதாபாத்திரத்தை எனக்கு மிகவும் சிறப்பான ஒன்றாக மாற்றின. அவர் வழக்கமான கதாநாயகன் அல்ல; தான் சரியென நம்பும் விஷயத்திற்காகத் துணிச்சலுடன் நிற்கும் ஒரு சாதாரண மனிதர்.

இந்தப் புதிய சீசனில், புதிய வழக்கு அவருக்குப் பல்வேறு சவால்களை உருவாக்குவதோடு, இதுவரை சந்தித்திராத சூழ்நிலைகளையும் எதிர்கொள்ளச் செய்கிறது. எனவே, இந்தக் கதைக்குள் மீண்டும் பயணிப்பது மிகவும் உற்சாகமாக இருந்தது. இந்த சீசன் நீதி மற்றும் உண்மை தொடர்பான கேள்விகளை இன்னும் ஆழமாக ஆராய்கிறது. சுந்தரமூர்த்தியின் பயணத்தைப் பார்வையாளர்கள் மீண்டும் விரும்பி ஏற்றுக்கொள்வார்கள் என்று நம்புகிறேன்.”

நடிகை வரலட்சுமி சரத்குமார் கூறியதாவது:

“‘சட்டமும் நீதியும்’ தொடரில் என்னை உடனடியாகக் கவர்ந்தது, நீதி குறித்த அதன் தனித்துவமான பார்வைதான். ஒரு வழக்கை வழக்கமாகத் தீர்மானிக்கும் உண்மைகள், ஆதாரங்கள் மற்றும் நேரில் பார்த்த சாட்சிகளின் வாக்குமூலங்களை மட்டுமே நம்பியிருக்காமல், அறநெறி மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பான ஆழமான கேள்விகளையும் இந்தத் தொடர் ஆராய்கிறது. இது பார்வையாளர்களின் எண்ணங்களுக்கு தொடர்ந்து சவால் விடுத்து, நீதியைத் தேடும் பயணத்தில் அவர்களை ஈடுபாட்டுடன் வைத்திருக்கும் விறுவிறுப்பான சஸ்பென்ஸ் நாடகமாக உருவெடுக்கிறது.

ஒரு வழக்கின் இறுதித் தீர்ப்பில் மட்டும் கவனம் செலுத்தாமல், அதன் பின்னணியில் இருக்கும் மனிதர்கள், உணர்வுகள் மற்றும் சூழ்நிலைகளை ஆழமாக ஆராயும்போதுதான் நீதிமன்றப் பின்னணியிலான கதைகள் சுவாரஸ்யமானவையாக அமைகின்றன. எனது கதாபாத்திரம் இந்தக் கதைக்கு ஒரு புதிய பரிமாணத்தைச் சேர்க்கிறது. இந்தக் கதையின் மூலம் சட்ட உலகின் சிக்கலான அம்சங்களை ஆராய்ந்தது மிகவும் உற்சாகமாக இருந்தது. புதிய சீசனில் இடம்பெறும் திருப்பங்கள், மோதல்கள் மற்றும் வெளிப்படும் உண்மைகளைப் பார்வையாளர்கள் அனுபவிப்பார்கள் என்று ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.”

இயக்குநர் பாலாஜி செல்வராஜ் கூறியதாவது:

“‘சட்டமும் நீதியும்’ தொடரை உருவாக்கத் திட்டமிட்டபோது, சட்ட நடவடிக்கைகளைத் தாண்டி நீதியின் தார்மீகச் சிக்கல்களை ஆராயும் நீதிமன்றப் பின்னணியிலான கதையைச் சொல்லும் வாய்ப்பு இருப்பதாக நம்பினோம். முதல் சீசனுக்குக் கிடைத்த மிகப்பெரிய வரவேற்பு அந்த நம்பிக்கையை உறுதிப்படுத்தியதுடன், இரண்டாவது சீசன் மூலம் கதையை மேலும் முன்னெடுத்துச் செல்லும் நம்பிக்கையையும் அளித்தது.

சுந்தரமூர்த்தியாகத் தனது சிறப்பான நடிப்பின் மூலம் மீண்டும் கவனம் ஈர்க்கும் சரவணன் மற்றும் தனது வலிமையான திரை இருப்பின் மூலம் கதைக்குப் புதிய பரிமாணத்தைச் சேர்க்கும் வரலட்சுமி சரத்குமார் ஆகிய திறமையான கலைஞர்களுடன் பணியாற்றியது, கதை சொல்லும் அனுபவத்தைப் பெரிதும் மேம்படுத்தியது. இயக்குநராக, இத்தகைய திறமையான நடிகர்களுடன் இணைந்து பணியாற்றியதும், நீதிமன்ற நாடக வகைக்குள் புதிய பரிமாணங்களை ஆராய்ந்ததும் மிகுந்த உற்சாகத்தையும் படைப்பாற்றல் சார்ந்த நிறைவையும் அளித்தது.

இரண்டாவது சீசன், தொடரின் அடிப்படை உணர்வுக்கு உண்மையாக இருந்துகொண்டே கதையை மேலும் விரிவுபடுத்த எங்களுக்கு வாய்ப்பளித்தது. இந்த விறுவிறுப்பான, சிந்திக்கத் தூண்டும் பயணத்தைப் பார்வையாளர்கள் அனுபவிப்பார்கள் என்று ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.”

தயாரிப்பாளர் சசிகலா பிரபாகரன் கூறியதாவது:

“‘சட்டமும் நீதியும்’ முதல் சீசனுக்குக் கிடைத்த வரவேற்பு, பொழுதுபோக்குடன் சிந்திக்கவும் தூண்டும் கதைகளைக் காண பார்வையாளர்கள் ஆர்வமாக இருப்பதை உறுதிப்படுத்தியது. தயாரிப்பாளர்களாக, வலுவான கதை அடித்தளத்தைக் கொண்ட படைப்புகளை ஆதரிப்பதிலேயே எங்களுடைய கவனம் எப்போதும் இருந்து வருகிறது. இந்தத் தொடருக்குக் கிடைத்த மிகப்பெரிய வரவேற்பு, இன்னும் சிறப்பான மற்றும் சுவாரஸ்யமான இரண்டாவது சீசனுடன் திரும்புவதற்கான உத்வேகத்தை அளித்தது.

நீதிமன்றப் பின்னணியில் அதிகாரம், செல்வாக்கு, உண்மை மற்றும் அறநெறி சார்ந்த சிக்கல்களை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘சட்டமும் நீதியும் 2’ தொடரின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. சரவணன் மீண்டும் வழக்கறிஞர் சுந்தரமூர்த்தியாகத் தோன்றுவதுடன், வரலட்சுமி சரத்குமாரின் பங்களிப்பும் தொடருக்கு புதிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

‘சட்டமும் நீதியும் 2’ தொடரை அக்டோபர் 23, 2026 முதல் தமிழ் ZEE5 தளத்தில் காணலாம்.