கன்னியாகுமரி மாவட்டத்தின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான மாத்தூர் தொட்டிப்பாலத்தில் ‘துரோகம் பழகு’ திரைப்படத்தின் போஸ்டரைப் பறக்கவிட்டு, படக்குழுவினர் மேற்கொண்ட வித்தியாசமான விளம்பர முயற்சி பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
மகிழ் புரொடக்ஷன்ஸ் (Magizh Productions) சார்பில் C. பியூலா மகிழ் தயாரிப்பில், தக்க்ஷன் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘துரோகம் பழகு’. இப்படத்தை இயக்குநர் சீயோன் ராஜா இயக்கியுள்ளார். சமூக அக்கறை சார்ந்த கருத்துகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படம், அதன் புதுமையான விளம்பர உத்திகள் மூலம் ஆரம்பம் முதலே கவனம் பெற்று வருகிறது.
படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கெனவே வெளியாகியுள்ளது. மேலும், புதுச்சேரி முதலமைச்சர் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் இப்படத்தின் போஸ்டர்களை வெளியிட்டுள்ளனர். இளைஞர்களிடம் படத்தை அறிமுகப்படுத்தும் நோக்கில் கல்லூரிகளிலும் பல்வேறு விளம்பர நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதன் அடுத்தகட்டமாக, கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள பிரபலமான மாத்தூர் தொட்டிப்பாலத்தில் படத்தின் போஸ்டரைப் பறக்கவிட்டு படக்குழுவினர் புதிய விளம்பர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இயற்கை எழில் நிறைந்த சுற்றுலாத் தலத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த வித்தியாசமான புரமோஷன், அப்பகுதி மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது.
இப்படத்தில் G. M. குமார், வனிதா விஜயகுமார், லொள்ளு சபா ஜீவா, வாழை ஜானகி, அமுதவாணன், அப்புக்குட்டி, கஞ்சா கருப்பு, திவாகர் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ராஜா மற்றும் பாலா இணைந்து இசையமைத்துள்ளனர்.
வழக்கமான விளம்பர முறைகளிலிருந்து மாறுபட்டு, ஒவ்வொரு கட்டத்திலும் புதுமையான முயற்சிகளை முன்னெடுத்து வரும் ‘துரோகம் பழகு’ படக்குழு, தற்போது படத்தின் டிரெய்லர் வெளியீட்டிற்கான பணிகளில் கவனம் செலுத்தி வருகிறது. டிரெய்லர் வெளியாகும்போது படத்தின் கதைக்களம் குறித்த கூடுதல் தகவல்கள் தெரியவரும் என்பதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
படத்தின் வெளியீட்டுத் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் விரைவில் வெளியாகும் எனப் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். வித்தியாசமான புரமோஷன் முயற்சிகள் மூலம் திரையரங்கு வெளியீட்டிற்கு முன்பே கவனம் ஈர்த்து வரும் ‘துரோகம் பழகு’, அடுத்தடுத்த அறிவிப்புகள் மூலம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்து வருகிறது.






