UAE-ஐ தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் Triple M Production LLC நிறுவனம், தமிழ் திரைப்படங்களின் வெளிநாட்டு வெளியீடு மற்றும் விநியோகப் பணிகளில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது. இந்நிறுவனத்தை அதன் Executive Director ஜி. பாபு ராமகிருஷ்ணன் வழிநடத்தி வருகிறார்.
UAE, கத்தார், இந்தியா மற்றும் சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் FMCG வர்த்தகம் மற்றும் முதலீட்டுத் துறையில் அனுபவம் பெற்றுள்ள ஜி. பாபு ராமகிருஷ்ணன், தற்போது Triple M Production மூலம் தனது செயல்பாடுகளை சினிமா மற்றும் பொழுதுபோக்குத் துறையிலும் விரிவுபடுத்தியுள்ளார்.
இந்நிறுவனம் ஏற்கனவே ‘Irani’, ‘Niram Marum Ulagil’, ‘Ace’, ‘Akkenam’, ‘Bun Butter Jam’ உள்ளிட்ட பல்வேறு தமிழ் திரைப்படங்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளது. மேலும், UAE, சவுதி அரேபியா, கத்தார், குவைத், பஹ்ரைன் மற்றும் ஓமன் உள்ளிட்ட GCC நாடுகளில் திரைப்படங்களின் வெளியீடு மற்றும் விநியோகப் பணிகளையும் மேற்கொண்டு வருகிறது.
அந்த வரிசையில், இயக்குநர் ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஏழு கடல் ஏழு மலை’ திரைப்படத்தின் வெளிநாட்டு விநியோகத்திலும் Triple M Production LLC, Dubai இணைந்துள்ளது.
நிவின் பாலி, அஞ்சலி மற்றும் சூரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். V House Productions சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள இப்படம் வரும் அக்டோபர் 1, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
தமிழ் திரைப்படங்களை GCC நாடுகள் மட்டுமின்றி சர்வதேச அளவிலான ரசிகர்களிடமும் கொண்டு சேர்ப்பதை நோக்கமாகக் கொண்டு Triple M Production தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் இந்திய திரைப்படத் துறைக்கும் சர்வதேச திரைப்பட சந்தைகளுக்கும் இடையிலான வர்த்தக மற்றும் விநியோகத் தொடர்புகளை மேலும் வலுப்படுத்தும் முயற்சியிலும் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.





