ரஜினிகாந்தைச் சந்தித்து வாழ்த்துப் பெற்ற ரெட் ஜெயன்ட் மூவிஸ் M. செண்பகமூர்த்தி!

ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்தின் இணைத் தயாரிப்பாளர் M. செண்பகமூர்த்தி தனது பிறந்தநாளை இன்று (அக்டோபர் 27) கொண்டாடினார். இதையொட்டி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை நேரில் சந்தித்த அவர், அவரிடமிருந்து பிறந்தநாள் வாழ்த்துகளைப் பெற்றார்.

இந்தப் பிறந்தநாள் சந்திப்பின்போது, தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவரும், லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்தின் தலைமை அதிகாரியுமான GKM தமிழ்குமரன், தயாரிப்பாளர் எல்ரெட் குமார், சக்தி ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனத்தின் B. சக்திவேலன் உள்ளிட்ட திரையுலகப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

மேலும், பல்வேறு திரைப்பட விநியோகஸ்தர்கள் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவன ஊழியர்களும் பங்கேற்று, M. செண்பகமூர்த்திக்கு தங்களது பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

திரையுலகைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள் பங்கேற்ற இந்தச் சந்திப்பு, அவரது பிறந்தநாள் கொண்டாட்டத்தைச் சிறப்பானதாக மாற்றியது.