தென்னிந்திய திரைப்பட நடிகை பிரியங்கா மோகன், டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் ஏற்பாடு செய்திருந்த அரசு விருந்தில் பங்கேற்றார். தென் கொரிய அதிபர் லீ ஜே-மியுங்குடனான இந்தச் சந்திப்பில், அவரது சர்வதேச நெட்ஃபிக்ஸ் திரைப்படமான “மேட் இன் கொரியா” (Made In Korea) உலகளாவிய அளவில் பெற்ற மாபெரும் வெற்றி மற்றும் அங்கீகாரம் சர்வதேச அளவில் கொண்டாடப்பட்டது
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு குறித்து தனது Instagram பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்ட பிரியங்கா மோகன், இது தனது நீண்ட நாள் கனவு நனவான தருணம் எனவும், இந்தியக் கதைகள் உலகளவில் இணைவதைக் காணும்போது பெருமையாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
ரா. கார்த்திக் இயக்கத்தில் பிரியங்கா மோகன் நடிப்பில் உருவான இப்படம், உலகளவில் 54 நாடுகளில் நெட்ஃபிக்ஸ் தளத்தில் டாப் இடங்களைப் பிடித்து சர்வதேச அளவில் சாதனை படைத்துள்ளது.





