‘கர’ விமர்சனம்

ஒரு சாதாரண திருடன், மக்கள் நாயகனாக உருவெடுக்கும் எமோஷனல் ஆக்ஷன் டிராமாவே இந்த ‘கர’.கதைக்கரு.

தனுஷ் மற்றும் பிருத்வி இருவரும் ஆரம்பத்திலேயே ஒரு எம்.எல்.ஏ வீட்டைத் திருட முயலும்போது அதில் தனுஷ் மட்டும் சிக்கிக்கொள்கிறார். தனது, பப்ளிசிட்டிக்காக அவர் மீது அடுக்கடுக்கான வழக்குகளைப் போடுகிறார் உயர் அதிகாரி சுராஜ் வெஞ்சாராமுடு.

அங்கிருந்து தப்பித்து ரேணிகுண்டாவில் மமிதா பைஜுவுடன் அமைதியான வாழ்வைத் தேடும் தனுஷுக்கு, வறுமை துரத்தவே மீண்டும் தன் சொந்த ஊருக்குத் திரும்புகிறார். தந்தையான கே.எஸ். ரவிக்குமாரிடம் நிலத்தை விற்க உதவி கேட்கும் போதுதான், அந்த நிலம் ஏற்கனவே வங்கியில் அடமானத்தில் இருப்பது தெரிகிறது.

ஒரு கட்டத்தில் வங்கி, நிலத்தை ஜப்தி செய்ய, தந்தை மரணமடைய, பிணத்தை அடக்கம் செய்யக்கூட நிலம் இல்லாமல் தனுஷ் தவிக்கிறார். இந்த இக்கட்டான சூழலில் இருந்து தனுஷ் எப்படி மீண்டார்? அதிகார வர்க்கத்தை எப்படி எதிர்த்தார்? என்பதே மீதிக்கதை.

தனுஷ்: ‘கர சாமி’யாக தனுஷ் வாழ்ந்திருக்கிறார். சிறுவயதில் வீட்டை விட்டு ஓடியது முதல், தவறான வழியில் பிழைப்பு நடத்திவிட்டு, மீண்டும் தந்தையிடம் வந்து தஞ்சம் புகுவது வரை எமோஷனல் காட்சிகளில் பின்னி எடுக்கிறார். ஆக்ஷன் காட்சிகளில் வழக்கம் போல மாஸ் காட்டுகிறார்.

கே.எஸ். ரவிக்குமார்: “இவரா இது?” என்று கேட்கும் அளவுக்கு ஒரு எதார்த்தமான தந்தையாக உருக்கமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். பிறர்: கருணாஸ், பிருத்வி மற்றும் மமிதா பைஜு என அனைவரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தைச் சிறப்பாகச் செய்துள்ளனர். போலீஸ் அதிகாரியாக வரும் சுராஜ் தனுஷை தேடும் காட்சிகள் திரைக்கதைக்கு பலம் சேர்க்கின்றன. இதில் ஜெயராமின் கதாபாத்திரம் அவர் கொடுக்கும் டுவிஸ்ட் எதிர்பாராதது..

இயக்குநர் விக்னேஷ் ராஜா முதல் பாதியை ஒரு எமோஷனல் டிராமாவாக நகர்த்தியுள்ளார். தனுஷ் ஒரு திருடன் என்றாலும், அவர் ஏன் திருடன் ஆனார் என்பதற்கான நியாயத்தை விளக்க எடுத்துக் கொண்ட ஒரு மணி நேரம் மிக மெதுவாக நகர்கிறது. இருப்பினும், இரண்டாம் பாதியில் தனுஷ், பிருத்வி மற்றும் கருணாஸ் இணையும் அந்த பேங்க் கொள்ளை காட்சிகள் விறுவிறுப்பை ஏற்றுகின்றன. ஆடுகளம் நரேன் வரும் காட்சிகள் தியேட்டரில் விசில்களை பறக்கவிடுகின்றன. ‘போர் தொழில்’ படத்தில் இருந்த அந்த நுணுக்கமான லாஜிக் இந்த படத்தில் ஆங்காங்கே மிஸ் ஆகிறது.

1990-களின் பின்னணியை மிகவும் தத்ரூபமாகப் படம்பிடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷின் இசை ஓகே ரகம் என்றாலும், பின்னணி இசை பல இடங்களில் பழைய படங்களை நினைவூட்டுகிறது.: லோன் மாஃபியாக்களிடம் சிக்கி மக்கள் படும் அவதியை 90-களிலேயே பதிவு செய்தது பாராட்டத்தக்கது. தனுஷ் மற்றும் இதர நடிகர்களின் அபார நடிப்பு., இரண்டாம் பாதியில் வரும் விறுவிறுப்பான பேங்க் கொள்ளை காட்சிகள், உணர்ச்சிகரமான தந்தை – மகன் உறவு ஆகியவை பிளஸ். முதல் 45 நிமிடங்கள் மிக மெதுவாக நகரும் காட்சிகள்..திரைக்கதையில் பெரிய திருப்பங்கள் இல்லாதது..லாஜிக் மீறல்கள் மற்றும் பழக்கப்பட்ட கமர்ஷியல் க்ளைமேக்ஸ். ஆகியவை மைனஸ்

சில தடுமாற்றங்கள் இருந்தாலும், சாமானிய மக்களுக்காகப் போராடும் இந்த சாமி, ரசிகர்களின் மனதை வெல்கிறான்!