தனது நடிப்பைக் கொண்டாடும் ரசிகர்கள்… “டோரதி” வெற்றியால் மகிழும் ஜீவா!

ஒரு கலைஞர் தனது திறமையால் பார்வையாளர்களின் மனதில் இடம்பிடிப்பதும், அதற்கான பாராட்டுகளைப் பெறுவதும் மிகப்பெரிய மகிழ்ச்சியைத் தரும். அந்த மகிழ்ச்சியையும் நீண்ட காலமாக எதிர்பார்த்திருந்த அங்கீகாரத்தையும் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் ‘டோரதி’ திரைப்படம் தனக்கு வழங்கியுள்ளதாகத் திருநங்கை நடிகை ஜீவா சுப்பிரமணியம் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

திரைப்படங்கள் மற்றும் இணையத் தொடர்களில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த ஜீவா சுப்பிரமணியம், ‘டோரதி’ படத்தில் தனது நடிப்புக்குக் கிடைத்து வரும் பாராட்டுகளால் மகிழ்ச்சியில் திளைத்து வருகிறார். தனது நடிப்பை ரசிகர்கள் கவனித்து, மனதாரப் பாராட்டுவதுடன் கொண்டாடுவதும் நீண்ட காலமாகத் தான் எதிர்பார்த்திருந்த தருணம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து ஜீவா சுப்பிரமணியம் கூறியதாவது:

“எனது நடிப்புக்காக மக்கள் அங்கீகாரம் அளித்துக் கொண்டாடுவதை இப்போதுதான் முதன்முறையாக உணர்கிறேன். இத்தனை ஆண்டுகளாக இந்தத் தருணத்திற்காகக் காத்திருந்தேன். எனது தம்பி கார்த்திக் சுப்புராஜ் மூலமாக அந்த மகிழ்ச்சி இப்போது கிடைத்துள்ளது. இந்த வாய்ப்பை வழங்கிய இயக்குநருக்கும், எனக்கு உறுதுணையாக இருந்த படக்குழுவினர் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கார்த்திக் சுப்புராஜ், ரிஷிகாந்த், சனந்த், கீர்த்தி சுரேஷ் மேடம் உள்ளிட்டோர் எங்கு சென்றாலும் என்னைப் பற்றிப் பேசுகிறார்கள். என்னை ‘ஜீவா அக்கா’ என்று அன்புடன் அழைக்கிறார்கள். அவர்களின் அன்பும், ரசிகர்கள் அளிக்கும் ஆதரவும் எனக்கு அளவற்ற மகிழ்ச்சியைத் தருகின்றன. இந்த மகிழ்ச்சி, இன்னும் பத்து ஆண்டுகளுக்குத் தொடர்ந்து பயணிப்பதற்கான புதிய ஆற்றலை எனக்குக் கொடுத்திருக்கிறது” என்றார்.

இதுவரை சுமார் 45 திரைப்படங்கள் மற்றும் இணையத் தொடர்களில் நடித்துள்ள ஜீவா சுப்பிரமணியம், ‘ஆக்கம்’, ‘தாரை தப்பட்டை’, ‘தர்மதுரை’, ‘தர்பார்’ உள்ளிட்ட படங்களிலும், ‘சுழல்’, ‘கையும் களவும்’ உள்ளிட்ட இணையத் தொடர்களிலும் தனது நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். தற்போது ‘டோரதி’ திரைப்படத்தில் அவர் ஏற்றுள்ள கதாபாத்திரம் திரையுலகினர் மற்றும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இப்படத்தின் மூலம் கிடைத்துள்ள வரவேற்பைத் தொடர்ந்து, ஹைதராபாத், பெங்களூரு, கேரளா மற்றும் இந்தித் திரையுலகைச் சேர்ந்த நண்பர்களும் நலம் விரும்பிகளும் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். பல ஆண்டுகளாகத் திரைத்துறையில் தொடர்ந்து பணியாற்றி வரும் தனக்குக் கிடைத்துள்ள இந்த அன்பும் பாராட்டும் மிகுந்த மனநிறைவை அளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

‘டோரதி’ படத்தின் மூலம் கிடைத்திருக்கும் அங்கீகாரம், தொடர்ந்து புதிய முயற்சிகளுடன் பயணிக்கவும், தனது நடிப்புத் திறமையை மேலும் வெளிப்படுத்தவும் ஊக்கமளிப்பதாக ஜீவா நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும், தனக்கு வாய்ப்பளித்து அன்புடன் ஆதரித்த இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் மற்றும் அவரது இயக்கக் குழுவைச் சேர்ந்த விக்கி, கீர்த்தி, ஸ்ரீனிவாசன், பரத் ஆகியோருக்கும் நன்றியைத் தெரிவித்துள்ளார்.

தான் மதிக்கும் மனிதர்களிடமிருந்து கிடைத்த அன்பும் அங்கீகாரமும் தனது வாழ்க்கையில் மறக்க முடியாத மகிழ்ச்சியான தருணத்தை உருவாக்கியுள்ளதாக ஜீவா சுப்பிரமணியம் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.